மீண்டும் உயர்கிறதா டெல்லி மெட்ரோ ரயில் கட்டணம்?

Last Updated : Sep 28, 2017, 12:29 PM IST
மீண்டும் உயர்கிறதா டெல்லி மெட்ரோ ரயில் கட்டணம்? title=

டெல்லி மெட்ரோ ரயில்களில் கட்டணம் ரூ.10 வரை உயர்த்தப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இந்த விலை உயர்வு அடுத்த மாதம் ( அக்டோபர் ) முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

கடந்த மே மாதம் மெட்ரோ ரயிலின் டிக்கெட் விலை உயர்த்தப்பட்ட நிலையில், மீண்டும் ரயில் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டதற்கு டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டிவிட்டரில் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ள கருத்து:-

மெட்ரோ ரயில் டிக்கெட் விலை உயர்வு மக்கள் நலனுக்கு எதிரனது. மெட்ரோ ரயில் கட்டணம் உயர்வதை தடுக்கும் வழியை ஒருவாரத்திற்குள் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கலோட்டிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் அக்டோபர் மாதம் முதல் மெட்ரோ ரயில் விலை அதிகரிக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

Trending News