ஊழல் குற்றச்சாட்டு: ‘வாய்மையே வெல்லும்’ அர்விந்த் கெஜ்ரிவால் கருத்து

Last Updated : May 9, 2017, 10:02 AM IST
ஊழல் குற்றச்சாட்டு: ‘வாய்மையே வெல்லும்’ அர்விந்த் கெஜ்ரிவால் கருத்து title=

ஊழல் குற்றச்சாட்டை குறித்து ‛வாய்மையே வெல்லும்' என கெஜ்ரிவால் முதல்முறையாக கருத்து தெரிவித்துள்ளார்.

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. கட்சியில் பல்வேறு பிரச்னைகள் சிக்கி தவிக்கும் ஆம் ஆத்மி, தற்போது அந்த கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது, அந்த கட்சின் அமைச்சர் பதவியில் இருந்து கபில் மிஸ்ரா ஊழல் குற்றம் சாட்டி உள்ளார். 

இன்று காலை டெல்லி ராஜ்கோட்டில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஆம் ஆத்மி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவாலின் மீது ஊழல் புகார் தெரிவித்துள்ளார் கட்சியின் நீக்கப்பட்ட நீர்த்துறை அமைச்சர் கபில் மிஸ்ரா. ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் கட்சி முக்கியத் தலைவரான அமைச்சர் சத்யேந்திர ஜெயினிடம் இருந்து இரண்டு கோடி ரூபாய் வாங்கியதை நேரடியாகவே பார்த்தேன் என  குற்றம் சாட்டினார். மேலும் அதற்கான ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் அளித்தார்.

இந்நிலையில் கபில் மிஸ்ராவின் குற்றச்சாட்டுகள் குறித்து, முதன்முறையாக கெஜ்ரிவால் கருத்து தெரிவத்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பதிவில் ‛வாய்மையே வெல்லும்' என பதிவிட்டுள்ளார்.

தன் மீதான குற்றச்சாட்டை நாளை நடிக்க உள்ள சட்டசபை கூட்டத்தில் தெரிவிப்பேன் என முதல்வர் கெஜ்ரிவால் கூறினார். 

 

 

Trending News