சென்னையில் உள்ள கமல் ஹாசனின் இல்லத்தில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்தது. இதன் பிறகு இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது:-
டெல்லி முதல்வர் என்னை சந்திக்க வேண்டும் என்று கேட்டதையே நான் பாக்கியமாக கருதுகிறேன். சென்னை வந்து அவர் என்னை சந்தித்ததில் பெருமை கொள்கிறேன். ஊழலை எதிர்ப்பவர்கள் எனக்கு உறவினர். அந்த வகையில் கெஜ்ரிவாலும் எனது உறவினர். எனது தந்தை இருந்த போது அரசியலுடன் இந்த வீட்டுக்கு தொடர்பு உள்ளது.
இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் பேசினார்.
பின்னர் கெஜ்ரிவால் அளித்த பேட்டி:-
நான் கமல்ஹாசனுடைய தீவிர ரசிகன். நடிகராகவும், நல்ல மனிதராகவும் அவருடைய ரசிகன் நான். நாட்டில் பெரும்பாலானோர் மதவாதத்திற்கு எதிரான கருத்தை கொண்டுள்ளனர். .ஊழல் மற்றும் மதவாதம் போன்ற பிரச்னைகளில் நாடு சிக்கியுள்ளது. இது குறித்து ஒத்த கருத்துடையவர்கள் பேச வேண்டும். கமல் அரசியலில் ஈடுபட வேண்டும். எதிர்காலத்திலும் இந்த சந்திப்பு தொடரும் என்றார். இந்த சந்திப்பு சிறந்ததாக அமைந்தது. வரவேற்பு கொடுத்த கமலுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.