தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஹேமந்த் சிங் குனியா (Hemant Singh Gauniya) என்பவர் டெல்லியில் முதல் அமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் அரசின் அன்றாட செலவுகள் குறித்த விவரங்களை இந்த வார தொடக்கத்தில் கேட்டிருந்தார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேஜ்ரிவால் அலுவலகத்தின் செலவுகளை அளித்தது. அதில், 2015-16 நிதியாண்டில் ரூ 23.12 லட்சம், அதேபோல 2016-17 நிதியாண்டில் 46.54 லட்சம் ரூபாயும், 2017-18 நிதியாண்டில் 33.36 லட்சம் ரூபாயும் தேநீர் மற்றும் சிற்றுண்டிக்காக முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அலுவலகம் செலவு செய்துள்ளதாக தகவல் கிடைத்ததுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும்
மூன்று ஆண்டுகளில் தேயிலை மற்றும் தின்பண்டங்கள் செலவாக மொத்தம் ஒரு கோடியே மூன்று லட்சம் (1,03,04,162) முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அலுவலகம் செலவு செய்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கிடைத்துள்ளது.
இதுகுறித்து ஹேமந்த் சிங் குனியா கூறியது,
மேலும் 2016-ம் ஆண்டு மொத்தம் ரூ 47.29 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. அதில் முதல்வர் அலுவலகம் 22,42,320 ரூபாயும், கேஜ்ரிவால் வீட்டில் உள்ள முகாம் அலுவலகம் 24,86,921 ரூபாயும் தேநீர் மற்றும் சிற்றுண்டிக்கு செலவு செய்துள்ளது.
அதேபோல 2015-16 ஆம் நிதியாண்டில் மொத்தம் 23,12,430 ரூபாய் செலவு. அதில் முதல்வர் அலுவலகத்தின் செலவுகள் 5,59,280 ரூபாயாகவும், அவரது வீட்டில் உள்ள அலுவலகத்தில் 17,53,150 ரூபாயும் தேயிலை மற்றும் தின்பண்டங்களுக்காக செலவு செய்துள்ளனர்
2014-ம் ஆண்டு மத்திய டெல்லியில் உள்ள பக்வான் தாஸ் சாலையில் ஐந்து படுக்கையறைகள் கொண்ட இரண்டு அடுக்கு மாடி வீட்டுக்கு கேஜ்ரிவால் இடம் பெயர்ந்தார். அதில் ஒரு மாடி தனது குடும்பத்காகவும், மற்றொன்று அலுவலகமாகவும் பயன்படுத்தப்படுத்தி வருகிறார்.
அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு வீண் செலவுகளை குறைக்க வேண்டும். வரிப்பணம் மக்களுக்காக மட்டுமே செலவு செய்யப்பட வேண்டும். மக்களின் நலத் திட்டங்களுக்கு செலவு செய்வதில் குற்றம் இல்லை. ஆனால் தேநீர் மற்றும் சிற்றுண்டிக்கு அதிக பணம் செலவு செய்வதை ஏற்க முடியாது என ஹேமந்த் சிங் குனியா கூறியுள்ளார்