டெல்லியில் ஆதார் அடையாள அட்டை இல்லாத பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் நிறுத்தப்பட்டதால் ஆளும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
இதனால் அதிருப்தி அடைந்த கெஜ்ரிவால் தலைமைச் செயலாளர் அன்சு பிரகாஷை நேற்று அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனை முடிந்தவுடன், ஆம் ஆத்மி கட்சியின் இரண்டு எம்.எல்.ஏக்கள் தன் மீது தாக்குதல் நடத்தியதாக தலைமைச்செயலாளர் அன்சு பிரகாஷ் புகார் தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து, துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலை சந்தித்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு குற்றம் செய்தவர்களை கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
Aam Aadmi Party (AAP) MLA Prakash Jarwal was arrested by #Delhi Police last night in connection with alleged assault of Delhi Chief Secretary Anshu Prakash (File pic) pic.twitter.com/NFeWzcVnPP
— ANI (@ANI) February 21, 2018
இதையடுத்து, தலைமைச் செயலாளர் அன்சு பிரகாஷ் புகாருக்கு பதிலளித்துள்ள பேசிய ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் யாரும் தாக்குதல் நடத்தவில்லை என்றும், ஆளுநருக்கு மட்டுமே பதில் கூறுவேன் என தலைமைச்செயலாளர் திமிராக பேசியதால் எம்.எல்.ஏ.க்கள் வாக்குவாதம் மட்டுமே செய்ததாக அவர்கள் கூறி வந்தனர்.
இந்நிலையில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் நேற்று டெல்லி தலைமை செயலாளரை தாக்கியதாக எழுந்த புகாரில் AAP MLA பிரகாஷ் ஜார்வால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
#WATCH: Delhi CM Arvind Kejriwal evades question on alleged assault of Delhi Chief Secretary Anshu Prakash. #Delhi pic.twitter.com/KGqSaa8gEb
— ANI (@ANI) February 21, 2018