டெல்லியில் IAS அதிகாரிகள் வேலைநிறுத்தத்தைக் கண்டித்து உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜிரிவாலுக்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ் ராஜ் குரல் கெடுத்துள்ளார்!
இதுகுறித்து அவர தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டடுள்ளதாவது... "மான்புமிகு முதன்மை தலைவர் அவர்களே... நீங்கள் உடற்பயிற்சி செய்வதிலும், யோகா புரிவதிலும் பிஸியாக இருப்பதை நாங்கள் அறிவோம். எனினும் இதற்கிடையில் ஏதேனும் ஒரு நிமிடத்தையாவது ஒதுக்கி, நற்பணிகள் செய்துவரும் கேஜிரிவாலின் போரட்டத்தை குறித்து ஆலோசியுங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
Dear supreme leader.. we know u r busy with Fitbit challenge..yoga n EXERCISE..can u spare a minute and take a deep breath.. look around ...and instruct bureaucrats to work with Chief Minister Kejriwal...(who is actually doing a good job ) and EXERCISE your DUTY too..#justasking
— Prakash Raj (@prakashraaj) June 17, 2018
முன்னதாக மூன்று மாதங்களுக்கு முன், டெல்லி அரசின் தலைமைச் செயலாளரை ஆம்ஆத்மி MLA-க்கள் தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் பெயரில், அமைச்சர்களுடன் IAS அதிகாரிகள் எவ்வித ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை எனவும், IAS அதிகாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர துணை நிலை ஆளுநர் பைஜால் எவ்வித முயற்சியும் எடுக்காமல், அவர்களைத் தூண்டிவிடுகிறார் எனவும் ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இதையடுத்து, IAS அதிகாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜிரிவால் கடந்த 3 நாட்களாக துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்திலும், உண்ணாவிரதத்திலும் ஈடுப்பட்டு வருகின்றார். மேலும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் எனவும் அரவிந்த் கேஜிரிவால் அவர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில் இவரது போராட்டத்திற்கு நடிகர் பிரகாஷ் ராஷ் அவர்கள் ஆரதவு தெரவித்து ட்வீட் செய்துள்ளார்!