ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று 30 கழிவு சுத்திகரிப்பு இயந்திரங்களின் முன்னோட்டத்தினை துவங்கி வைத்தார்.
இந்த 30 இயந்திரங்களில் கழிவு சேகரிப்பு லாரிகள், மரம் கத்தரித்து இயந்திரங்கள், சாலை துப்புரவு மற்றும் இதர துப்புரவு இயந்திரங்கள் என மொத்தம் 30 இயந்திரங்கள் அடங்கும்.
Andhra Pradesh Chief Minister N Chandrababu Naidu flagged off 30 solid waste management machines in Amaravati pic.twitter.com/WJBfxIzuhu
பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து இந்தியாவுக்கு ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் பெற்று தந்தார். இதனால் இவருக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து பணம், பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
மேலும், சந்திரபாபு தலைமையிலான ஆந்திர அரசு பி.வி.சிந்துவுக்கு குரூப் 1 பிரிவு அதிகாரி பொறுப்பான துணை ஆட்சியர் பதவி வழங்கி கெளரவித்தது.
இந்நிலையில், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆந்திர மாநிலம் கொல்லபுடியில் உள்ள தலைமைச் செயலகத்தில் நேற்று துணை கலெக்டராக பொறுப்பேற்றார்.
இந்திய நாட்டின் 13வது துணை குடியரசுத் தலைவராக வெங்கையா நாயுடு வெற்றிபெற்றுள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி அவர்களின் பதவிக் காலம் வரும் 10-ம் தேதி முடிவடைம் நிலையில். இப்பதவிக்கான வேட்பாளர்களாக பாஜக சார்பில் வெங்கையா நாயுடுவும், எதிர்க்கட்சிகள் சார்பில் மேற்குவங்க முன்னாள் ஆளுநர் கோபால்கிருஷ்ண காந்தியும் அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் நேற்றைய தினம் மாலை வெளியிடப்பட்டது. அதன்படி 272 வாக்குகள் வித்தியாசத்தில் துணை குடியரசுத் தலைவராக வெங்கையா நாயுடு வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இன்று மாலை 5.28 மணிக்கு, மாக் 3 டி1 ராக்கெட் மூலம் ஜி சாட்-19 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது.
இந்த ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டால், மனிதனை விண்ணுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இஸ்ரோவின் கனவும் விரைவில் சாத்தியமாகும் என எதிர்பாரக்கப்படுகிறது.
இந்நிலையில் ஜி சாட் செயற்கைக்கோளின் 10 முக்கிய அம்சங்கள்:-
> ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் ஏவப்படும் அதிக எடைகொண்ட செயற்கைக்கோள் ஜிசாட் 19 ஆகும்
ஜிஎஸ்எல்வி மாக் 3 டி1 ராக்கெட் மூலம் ஜி சாட்-19 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான கவுன்ட்டவுன் நேற்று தொடங்கியது.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இன்று மாலை 5.28 மணிக்கு, மாக் 3 டி1 ராக்கெட் மூலம் ஜி சாட்-19 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான 25 மணி நேர கவுன்டவுன் நேற்று மாலை 3.58 மணிக்கு துவங்கியது.
இஸ்ரோவால் முழுவதும் உள்நாட்டிலேயே கிரையோஜெனிக் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்த ராக்கெட், ஜிசாட்-19 செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்த உள்ளது. 3,136 கிலோ எடை கொண்ட இது, இணைய தொலைத்தொடர்பு செயற்கைகோள் ஆகும்.
ஆந்திரா பிரதேஷ மாநிலத்தின் அமைச்சர் நாராயணாவின் மகன் நிஷிடா இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.
ஜூப்லி மலைப்பகுதியில் நண்பர் ராஜாவிடம் நிஷிடம் சென்ற கார் சாலையோரத்தில் இருந்த மெட்ரோ ரயில் பாலத்தின் தூண் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அமைச்சர் நாராயணாவின் மகன் நிஷிடா மற்றும் அவரது நண்பர் ராஜாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் செம்மரம் வெட்டச்சென்றதாக 174 தமிழர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திரப் பிரதேசத்தின் காஜூபேட்டையில் செம்மரம் வெட்டச்சென்றதாக 16 தமிழர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்பனையில் லங்கமல்லாவில் 158 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மொத்தம் 174 தமிழர்கள் செம்மரம் வெட்டச்சென்றதாக குற்றம்சாட்டப்பட்டு, ஆந்திர செம்மரக்கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 10 டன் செம்மரம், 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆந்திரா வழியாக ஒடிசாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த விரைவு ரயில் ஒன்று, திடீரென தடம்புரண்டதில், 26 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
அங்குள்ள குனேரு ரயில்நிலையம் அருகிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது ஒடிசாவை ஒட்டிய ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இவ்வழியாக, நேற்று நள்ளிரவு ஜக்தால்புர் புவனேஸ்வர் விரைவு ரயில் சென்றுகொண்டிருந்தது.
திடீரென ரயில் என்ஜீன், சரக்குப் பெட்டி, ஏசி பயணிகள் பெட்டி, ஜெனரல் பெட்டிகள் உள்ளிட்டவை தடம்புரண்டன. இதில், 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
வங்கக் கடலில் உருவாகி உள்ள "வர்தா' புயல் அதிதீவிர புயலாக மாறி உள்ளது. இந்தப் புயல் இன்று பிற்பகல் சென்னை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்தப் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும். ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
புயல் சென்னைக்கு அருகில் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.