ஜக்தால்புர் புவனேஸ்வர் விரைவு ரயில் தடம்புரண்டது: 26 பலி

Last Updated : Jan 22, 2017, 10:15 AM IST
ஜக்தால்புர் புவனேஸ்வர் விரைவு ரயில் தடம்புரண்டது: 26 பலி title=

ஆந்திரா வழியாக ஒடிசாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த விரைவு ரயில் ஒன்று, திடீரென தடம்புரண்டதில், 26 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

அங்குள்ள குனேரு ரயில்நிலையம் அருகிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது ஒடிசாவை ஒட்டிய ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இவ்வழியாக, நேற்று நள்ளிரவு ஜக்தால்புர் புவனேஸ்வர் விரைவு ரயில் சென்றுகொண்டிருந்தது.

திடீரென ரயில் என்ஜீன், சரக்குப் பெட்டி, ஏசி பயணிகள் பெட்டி, ஜெனரல் பெட்டிகள் உள்ளிட்டவை தடம்புரண்டன. இதில், 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

இந்த விபத்திற்கான காரணம் குறித்து, ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த விபத்துக்கு பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

ராயகடா ஹெல்ப்லைன் எண்:-

06856-223400, 06856-223500 BSNL MOBILES 09439741181, 09439741071, AIRTEL 07681878777.

விஜயநகரம் ஹெல்ப்லைன் எண் RLY NO. 83331, 83332, 83333, 83334 BSNL LAND LINE: 08922-221202, 08922-221206,

Trending News