ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இன்று மாலை 5.28 மணிக்கு, மாக் 3 டி1 ராக்கெட் மூலம் ஜி சாட்-19 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது.
இந்த ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டால், மனிதனை விண்ணுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இஸ்ரோவின் கனவும் விரைவில் சாத்தியமாகும் என எதிர்பாரக்கப்படுகிறது.
இந்நிலையில் ஜி சாட் செயற்கைக்கோளின் 10 முக்கிய அம்சங்கள்:-
> ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் ஏவப்படும் அதிக எடைகொண்ட செயற்கைக்கோள் ஜிசாட் 19 ஆகும்
> ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூன்று மோட்டார்களை கொண்டுள்ளது. 2 திட நிலை மற்றும் ஒரு திரவ நிலை மோட்டார்கள்.
> இந்த ஒற்றை செயற்கைக்கோள் வெற்றி பெற்றால் ஏற்கனவே உள்ள 6-7 பழைய தகவல்தொடர்பு செயற்கைக்கோளுக்கு இது சமமாகும்.
> புவி வட்டப்பாதையில் 41 இந்திய செயற்கைக்கோள்களில் 13 செயற்கைக்கோள்கள் தகவல் தொடர்பு செயற்கை கோள்கள் ஆகும்.
> முதன்முறையாக விண்வெளி சார்ந்த இணையதள சேவைகளை பெற இந்த செயற்கைக்கோள் பயன்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
> இந்தியாவில் இருந்து தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய செயற்கைகோள் இதுவாகும்.
> ஜிசாட்- 19 உள்நாட்டு ரீதியில் முதல் முறையாக தயாரிக்கப்பட்ட லித்தியம் அயன் பேட்டரிகளில் இயங்கும்.
> இஸ்ரோவின் படி, ஜிசாட் "ஜியோஸ்டேஷன் கதிர்வீச்சு ஸ்பெக்ட்ரோமீட்டர், சுமைகளை சார்ஜ் செய்யும் துகள்களின் தன்மை மற்றும் செயற்கைக்கோள்கள் மற்றும் அவற்றின் மின்னணு பாகங்கள் மீது விண்வெளி கதிர்வீச்சின் தன்மை குறித்து ஆய்வு செய்கிறது".
> ஜிசாட் 19 செயற்கைக்கோள் மைக்ரோ எலெக்ட்ரோ-மெக்கானிக்கல் சிஸ்டம்ஸ், ஆக்ஸ்லரோமீட்டர் உள்ளிட்ட பல நவீன தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது.
> ஜிசாட்-19 செயற்கைக்கோளில் டிரான்ஸ்பான்டர்கள் இல்லை, அதற்கு பதிலாக அது பல அதிர்வெண்களை பயன்படுத்தப்பட்டுள்ளது.