சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டிவி அலுவலம் மற்றும் நமது எம்.ஜி.ஆர் (தமிழ் செய்தித்தாள்) அலுவலகத்தில் இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
குஜராத் எம்.எல்.ஏ -கள் இருப்பிடத்தில் ரெய்டு நடத்தும் வருமான வரித்துறை, கூவத்தூர் விடுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் குதிரை பேரம் நடந்தபோது வேடிக்கைப் பார்த்தது ஏன்? என திமுக கழக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
ஆகஸ்ட் 8 ம் தேதி குஜராத்தில் காலியாக உள்ள 3 ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் உள்ளது.
இந்நிலையில் 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் பதவி விலகியதால், மற்றவர்கள் அணி மாறாமல் இருக்க, எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும் பெங்களூரு அருகே உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்க வைத்துள்ளனர்.
இது தொடர்பாக பல சர்ச்சைகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள ரிசார்ட்டில் இன்று காலை 7 மணி முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
ஜுலை 1-ம் தேதி முதல் தங்களது ‘பான் கார்டு’ எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு.
‘பான் கார்டு’டன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்ற உத்தரவு வரும் ஜுலை மாதம் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. மத்திய அரசின் அனைத்து திட்டங்களின் பயனைப் பெற வேண்டும் என்றால் ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
காளீஸ்வரி எண்ணை நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். காளீஸ்வரி நிறுவனங்களுக்கு சொந்தமான 54 இடங்களில், 250க்கும் மேற்பட்ட ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்நிறுவனம் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வருமான வரி அதிகாரிகள் 200 பேர் கொண்ட குழுவினர் நாடு முழுவதும் இந்நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில் காளீஸ்வரி நிறுவனம் 90 கோடி ரூபாய் வருமானத்தை மறைத்து வரிஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை இன்று அறிவித்துள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தில் ரூ. 45 கோடி மதிப்பிலான பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த தண்டபாணி என்பவர் காவலர் சீருடை விற்படை செய்யும் கடையை நடத்திவருகிறார். இந்நிலையில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் போலீசார் துணையுடன் இங்கு சோதனை நடத்தினர். அப்போது ரூ.45 கோடிக்கு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவரின் வீட்டில் இருந்து இந்த பணத்தை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மத்தியில் உள்ள சிபிஐ அமைப்பும், வருமான வரித்துறையினரும் அரசியல் நோக்கத்தோடு யாரையும் அணுக கூடாது என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று தென்னூரில் உள்ள, பெரிய நாச்சியம்மன் கோயில் குளம் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட திமுக செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்றார்.
அப்பொழுது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து அவர் பேசியது:
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்துகின்றனர்.
இந்த முறையின் சோதனையில் அமைச்சருக்குச் சொந்தமாக புதுக்கோட்டை மாவட்டம், இழுப்பூரில் உள்ள வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 7-ம் தேதி விஜயபாஸ்கர் மற்றும் கூட்டாளிகள் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சிக்கிய நகைகள், ஆவணங்களை ஆகியவற்றின் அடிப்படையில் தற்போது இழுப்பூரில் சோதனை நடத்தப்படுவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
காளீஸ்வரி எண்ணை நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். காளீஸ்வரி நிறுவனங்களுக்கு சொந்தமான 54 இடங்களில், 250க்கும் மேற்பட்ட ஐடி அதிகாரிகள் ஒரே நேரத்தில் காலை முதல் வருமான வரி சோதனை நடத்தி வருகிறார்கள்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள உரிமையாளர் வீடு மற்றும் மதுரை, விருதுநகர், உள்ளிட்ட 54 இடங்களில் வருமான வரித்துறை அதிரடியாக சோதனை நடந்து வருகிறது. பல ஆண்டுகளாக முறையான வருமானவரி தாக்கல் செய்யாததால் இந்த சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் மற்றும் அவரது மகன்கள் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறது.
போலி நிறுவனங்கள் மூலம் ரூ.1000 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக லாலு பிரசாத் யாதவ் மீது எழுந்த புகார் தொடர்பாக டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ரேவாரி, குர்கான் உள்ளிட்ட 22 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
பான் கார்டு மற்றும் ஆதார் கார்டுகளில் உள்ள தவறுகளை திருத்த, வருமான வரித்துறையின் இணைய தளத்தில் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வருமான வரித்துறையின் இணைய தளத்தில், இரண்டு புதிய இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் முதல் இணைப்பில், பான் கார்டில் உள்ள தவறுகளை திருத்தவும் மாற்றங்களை ஏற்படுத்தவும் வசதி உள்ளது. அதே போல், புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்கவும் முடியும்.
இதேபோல் மற்றொரு இணைப்பில், ஆதார் கார்டில் மாற்றம் செய்யவும், புதிய தகவல்களை இணைக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
கோகுலம் சிட் பைனான்ஸ் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்துகின்றனர்.
தமிழகம், கேரளா, பெங்களூரு, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோகுலம் சிட் பைனாஸ் இயங்கி வருகிறது. இன்று கோகுலம் சிட் பைனாஸ் நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 78 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. சோதனையில் 500 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் கோடம்பாக்கம், தி.நகர் உள்ளிட்ட 36 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. கோகுலம் நிறுவன உரிமையாளர் கோபாலன் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.
ஆர்கேநகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக வந்த புகாரை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தினார்கள்.
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், ஆர்கேநகர் தொகுதி வாக்காளர்களுக்கு, 89 கோடி ரூபாய் சிக்கின. அந்த பணத்தை, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மூலம் வழங்கியதும், ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
கடந்த வாரம் சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் நேரில் ஆஜராக வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினார்கள்.
இந்தநிலையில், தனக்கு வருமான வரித்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் துணைவேந்தர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி மனு தாக்கல் செய்துள்ளார். அதில்:-
கடந்த வாரம் சென்னையில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அவரது உறவினர்கள் வீடு, தொழில் நிறுவனங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.
அதேபோல் சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வீடு, சென்னை சாலிகிராமத்தில் உள்ள எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கீதாலட்சுமி வீடு, சென்னை சிட்லபாக்கத்தில் உள்ள முன்னாள் எம்.பி. ராஜேந்திரன் வீடு என மொத்தம் 35 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
சென்னை உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலை துணை வேந்தர் கீதாலட்சுமி ஆகிய 3 பேரும் இன்று ஆஜராக சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆர்கேநகர் இடைத்தேர்தலை முன்னிட்டு பணம் தந்த புகாரை அடுத்து வருமான வரித்துறை அலுவலர்கள் கடந்த வெள்ளிக்கிழமை வருமான வரித்துறை சோதனை நடத்தினர். அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள் வீடு, நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலை துணை வேந்தர் கீதாலட்சுமி ஆகியோரின் வீடுகளிலும் ரெய்டு நடைபெற்றது.
நேற்றுமுன்தினம் தமிழகம் முழுவதும் 35 இடங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அரசு பங்களா, புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அவரது வீடு, சென்னை, புதுக்கோட்டை, நாமக்கல், திண்டுக்கல்லில் உள்ள அவரது உறவினர்கள், நண்பர்களின் வீடு, சென்னையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் உள்ள அவரது அறை, திருச்சியில் உள்ள அவரது கல் குவாரி உள்ளிட்ட இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடந்தது.
ஆர்கேநகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா தொடர்பாக அதிகமான குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்கள் எழுந்ததை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் நேற்று முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
அமைச்சர் விஜய பாஸ்கர் மற்றும் அவரது உறவினர் களின் வீடுகள் உள்ளிட்ட 35 இடங்களில் நடந்த வருமானவரி சோதனையில், ரூ.4.5 கோடி ரொக்கம் முறைகேடு நடந்ததற்கான ஆதாரம் கிடைத்தது.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும், டிடிவிதினகரனின் தீவிர ஆதரவாளருமான விஜயபாஸ்கர் வீட்டில் நேற்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் வங்கி கணக்கில் ரூ.104 கோடி டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மேலும் மாயாவதியின் சகோதரரின் கணக்கில் ரூ.1.43 கோடியும் முறைகேடாக டெபாசிட் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பேசிய பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, ரூபாய் நோட்டு டெபாசிட் விவகாரத்தில் தன்னுடைய கட்சி விதிமுறைகளை சரியாக பின்பற்றுகிறது என்று கூறிஉள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.