ரூ. 3-4 லட்சம் கோடி கணக்கில் காட்டப்படாத பணம் டெபாசிட்

ரூபாய் நோட்டு வாபசிற்கு பிறகு 60 லட்சம் வங்கிளில் 2 லட்சத்துக்கு மேல் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

Last Updated : Jan 10, 2017, 01:11 PM IST
ரூ. 3-4 லட்சம் கோடி கணக்கில் காட்டப்படாத பணம் டெபாசிட் title=

புதுடெல்லி: ரூபாய் நோட்டு வாபசிற்கு பிறகு 60 லட்சம் வங்கிளில் 2 லட்சத்துக்கு மேல் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

ரூபாய் நோட்டு வாபசிற்கு என்று அறிவிப்புக்குப் பிறகு, கணக்கில் வராத 3-4 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது: 

கடந்த நவம்பர் 8-ம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டது. இதன் பிறகு வங்கிகளில் மட்டும் கணக்கில் வராத 3-4 லட்சம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ரூபாய் நோட்டு வாபசிற்கு பிறகு 60 லட்சம் வங்கிக்கணக்குகளில் தலா ரூ. 2 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. 

நவம்பர் 9-ம் தேதி முதல், வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு வங்கிக்கணக்குகளில் 10,700 ரூபாய் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. 

கூட்டுறவு வங்கிகளில் பல கணக்குகளில் 16,000 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. செயல்படாத வங்கி கணக்கில் மட்டும் 25,000 ரூபாய் ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என கூறினர்.

மார்ச் 31-ம் தேதிக்கு முன்பு பழைய ரூ.500 மற்றும் ரூ.1000நோட்டுகளை ரிசர்வ் வங்கி கிளைகளில் தக்க காரணங்கள் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம்.

Trending News