புதுடெல்லி: பகுஜன் சமாஜ் கட்சியின் வங்கி கணக்கில் ரூ.104 கோடி டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மேலும் மாயாவதியின் சகோதரரின் கணக்கில் ரூ.1.43 கோடியும் முறைகேடாக டெபாசிட் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பேசிய பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, ரூபாய் நோட்டு டெபாசிட் விவகாரத்தில் தன்னுடைய கட்சி விதிமுறைகளை சரியாக பின்பற்றுகிறது என்று கூறிஉள்ளார்.
இந்நிலையில் அக்கட்சியின் தலைவர் மாயாவதி செய்தியாளர்களிடம் பேசுகையில்:-
ஆகஸ்ட் 31-ம் தேதியில் இருந்து உத்தரபிரதேசத்தில் தான் உள்ளேன், நன்கொடைகள் மூலம் பணம் பெறப்பட்டது. பணம் முழுவதும் ரூபாய் நோட்டு ஒழிப்புக்கு முன்னர் பெறப்பட்டது.
பாரதீய ஜனதா தலித் பிரிவினர்களுக்கு எதிரான மனநிலையை கொண்டு உள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சிக்கு அவதூறை ஏற்படுத்த பா.ஜனதா அரசு நிர்வாகத்தை பயன்படுத்துகிறது. என்னுடைய சகோதரர் ஆனந்த் தனியாக தொழில் செய்து வருகிறார். வருமான வரித்துறை விதிமுறைகளின்படி பணத்தை டெபாசிட் செய்து உள்ளார்.
நவம்பர் 8-ம் தேதி அதாவது ரூபாய் நோட்டு ஒழிப்புக்கு முன்னர் பா.ஜனதா எவ்வளவு தொகையை டெபாசிட் செய்யதது என்பதை அறிவிக்கவேண்டும்.
உத்தரபிரதேசம் மாநில மக்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர்கள் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டாலும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு உதவிசெய்வார்கள்.
பாஜக மற்றும் அதன் கூட்டுறவுகள் கடந்த 2007-ம் ஆண்டில் இருந்து எங்களுக்கு தொல்லை கொடுத்து வருகிறது.
பாஜக பகுஜன் சமாஜ் மற்றும் என்னுடைய குடும்பத்திற்கு எதிராக ஒரு கேவலமான சதி திட்டத்தை தீட்டி வருகிறது.
பகுஜன் சமாஜ் கட்சி வருமான வரித்துறை விதிமுறைகளையும் பின்பற்றுகிறது. மீண்டும் பா.ஜனதாவிற்கு எடுத்துரைக்க விடும்புகின்றேன்.
என்று கூறினார்.
டெல்லியில் உள்ள யுனைடெட் பேங்க் ஆப் இந்தியாவின் கிளையில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தபோது, உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் வங்கி கணக்கில் ரூ.105 கோடி டெபாசிட் செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ரூ.102 கோடிக்கு பழைய 1,000 ரூபாய் நோட்டுகளும், ரூ.3 கோடிக்கு பழைய 500 ரூபாய் நோட்டுகளும் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தன. அடுத்தடுத்த நாட்களில் ரூ.15 கோடி முதல் ரூ.17 கோடி வரை டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.