Winter Pest Control Tips | குளிர்காலம் வந்துவிட்டாலே விஷப்பூச்சிகள் எல்லாம் வீட்டை நோக்கி படையெடுக்கும். கவனக்குறைவாக இருந்துவிட்டால் அது உயிருக்கே ஆபத்தாகிவிடும். அந்தவகையில் கரப்பான் பூச்சிகள், பல்லிகள் அதிகளவில் வீட்டுக்குள் வந்துவிட வாய்ப்பு இருக்கிறது. அவற்றை விரட்ட கடுமையான முயற்சிகளை எடுக்க வேண்டியிருக்கிறது. சில இந்த கரப்பான் பூச்சிகளை பார்த்தாலே அலறி அடித்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியே வருவார்கள். பொதுவாக கரப்பான் பூச்சி சமையலறை, பாத்ரூம் மற்றும் வீட்டின் மூலை முடுக்குகளில் இருக்கும். அழுக்குத் துணிகள் இருக்கும் இடங்களில்கூட கரப்பான் பல்லிகள் இருக்கும். அவை வீட்டுக்குள் வராமல் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், 5 வழிகள் உள்ளன. இதன் மூலம் கரப்பான் பல்லிகள் வீட்டுக்குள் வராமல் தடுக்கலாம்.
கரப்பான் பூச்சி மற்றும் பல்லியை விரட்ட வீட்டு வைத்தியம்?
வெங்காயம் மற்றும் பூண்டு
பல்லிகளை விரட்ட வெங்காயம், பூண்டு போன்றவற்றையும் பயன்படுத்தலாம். இதற்கு முதலில் பல்லி வீட்டிற்குள் எங்கிருந்து வருகிறது என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். பின்னர் அவை வரும் வழியில் நீங்கள் ஒரு துண்டு வெங்காயம் அல்லது பூண்டு வைக்கவும். பல்லிகளால் வெங்காயம் பூண்டு வாசனையை பொறுத்துக்கொள்ள முடியாது. ஒருவிதமான சகிப்புதன்மை இல்லாத காரணத்தால் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறும். மீண்டும் அந்த வழியில் வீட்டிற்குள் வராது.
முட்டை ஓடுகள்
முட்டை ஓடுகள் பல்லிகளை விரட்ட உதவும். பல்லிகளுக்கு முட்டை ஓடுகள் என்றால் அலர்ஜி. அதனால், பல்லிகள் அதிகம் இருக்கும் இடங்களில் இந்த முட்டை மேல் தோல்களை வைக்கவும். உடனே நீங்கள் ரிசல்டை பார்க்கலாம். முட்டை ஓடு வைத்த இடத்தில் இருந்து பல்லிகள் நொடியில் ஓடிவிடும்.
பெப்பர் ஸ்பிரே
பெப்பர் ஸ்ப்ரே மூலம் பல்லிகளை உங்கள் வீட்டில் இருந்து விரட்டலாம். இதற்கு கருப்பு மிளகு தூளை ஸ்ப்ரே பாட்டிலில் தண்ணீர் ஊற்றி கலக்கிக் கொள்ளவும். அந்த ஸ்பிரேவை பல்லி தங்கும் இடங்களில் தெளிக்கவும்.
நாப்தலீன் மாத்திரைகள்
நாப்தலீன் மாத்திரைகள் ஆடைகளில் உள்ள பூச்சிகளை விரட்டுவது மட்டுமல்லாமல், பல்லிகளை வீட்டிலிருந்து விரட்டவும் பயன்படுகிறது. இந்த மாத்திரைகளை உயரமான இடங்களிலும் வைக்கலாம். இருப்பினும், சிறு குழந்தைகள் கையில் இந்த மாத்திரைகள் சிக்காமல் பார்த்துக் கொள்வது அவசியம். இல்லையென்றால் பெரும் பிரச்சனையை எதிர்கொள்ள நேரிடும். சிறு குழந்தைகள் இருக்கும் வீடுகளில் இந்த முயற்சியை செய்யாமல் இருப்பதே நல்லது.
காபி தூள் மற்றும் புகையிலை
காபித் தூள் மற்றும் புகையிலையைக் கொண்டு உங்கள் வீட்டிலிருந்து பல்லிகளை விரட்டலாம். முதலில் காபி தூள் மற்றும் புகையிலை நன்றாக கலக்கவும். பின்னர் சின்ன மாத்திரை அளவில் உருண்டையாக பிடித்து பல்லி வரும் பாதையில் வைக்கவும்.
மேலும் படிக்க | குறைந்த வட்டியில் கடன் பெற உதவும் CIBIL ஸ்கோர்... சிறப்பாக இருக்க செய்ய வேண்டியவை
கரப்பான் பூச்சியிலிருந்து விடுபடுவது எப்படி?
பேக்கிங் சோடா
பேக்கிங் சோடா மற்றும் சர்க்கரையின் உதவியுடன் நீங்கள் வீட்டில் கரப்பான் பூச்சிகளை விரட்டலாம். இதற்கு முதலில் பேக்கிங் சோடா மற்றும் சர்க்கரை இரண்டையும் கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் போடவும். தண்ணீர் உற்றி நன்கு கலக்கி, அந்த ஸ்பிரேவை கரப்பான் பூச்சிகள் வந்து செல்லும் இடங்களில் தெளிக்கவும்.
கருப்பு மிளகு
கருப்பு மிளகு மற்றும் கிராம்பு உதவியுடன் கரப்பான் பூச்சிகளை விரட்டலாம். கருப்பு மிளகு தூளை தண்ணீரில் கலந்து கரப்பான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் தெளிக்கவும். இதேபோல், கிராம்பு பொடியையும் கலந்து தெளிக்கலாம். கரப்பான் பூச்சிகளுக்கு கருப்பு மிளகு மற்றும் கிராம்பு வாசனை பிடிக்காது.
பிரியாணி இலைகள்
பிரியாணி இலைகளின் உதவியுடன் கரப்பான் பூச்சிகளையும் விரட்டலாம். இதற்கு முதலில் பிரியாணி இலைகளை தண்ணீரில் ஊற வைக்கவும். அந்த தண்ணீரை ஸ்பிரே பாட்டிலில் அடைத்து கரப்பான் பூச்சிகள் மீது தெளிக்கவும். பிரியாணி இலை தண்ணீரை தெளிப்பதன் மூலம், அனைத்து கரப்பான் பூச்சிகளும் வீட்டில் இருந்து ஓடிவிடும்.
எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாறு மூலம் கரப்பான் பூச்சிகளை எளிதில் விரட்டலாம். இதற்கு தரையை சுத்தம் செய்யும் போது அந்த தண்ணீரில் எலுமிச்சை சாற்றை கலக்கவும். அந்த தண்ணீர் மூலம் தரையை சுத்தம் செய்யும்போது, கரப்பான் பூச்சிகள் வீட்டிற்குள் வராது. அந்த வாசனை கரப்பான் பூச்சிகளுக்கு அலர்ஜி.
பூண்டு, வெங்காயம் ஸ்பிரே
பூண்டு, வெங்காயம் மற்றும் சோப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து தண்ணீருடன் கலந்து ஒரு ஸ்பிரே தயார் செய்யவும். அதை வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் தெளிக்கவும். இந்த வாசனைகளும் கரப்பான் பூச்சிகளுக்கு எதிரி என்பதால் அவை வீட்டிற்குள் வராது.
மேலும் படிக்க | காலை 7 மணிக்கு முன் எழுவதால் ஏற்படும் 7 நல்ல மாற்றங்கள்!!
மேலும் படிக்க | அவசரத்துக்கு கடன் வேணும்னாலும் இந்த விஷயங்கள் தெரியலைன்னா வம்பு தான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ