பகுஜன் சமாஜ் கட்சியின் வங்கி கணக்கில் ரூ.104 கோடி டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மேலும் மாயாவதியின் சகோதரரின் கணக்கில் ரூ.1.43 கோடியும் முறைகேடாக டெபாசிட் செய்யப்பட்டது குறித்து அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
தமிழக தலைமை செயலாளர் ராமமோகன ராவ் வீட்டில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் பல கோடி பணம் , ஆவணங்கள் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனைதொடர்ந்து இன்று ஐஏஎஸ் அதிகாரி நாகராஜன் சோதனை நடத்தப்படுகிறது. பல்லாவரத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து சுமார் ரூ.2 கோடி பணம் மற்றும் 10 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த நவம்பர் 8-ம் தேதி ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டதற்கு பிறகு நாடு முழுவதும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் இதுவரை 3185 ரூபாய் கோடிக்கும் அதிகமான கறுப்பு பணம் சிக்கியுள்ளதாக தகவல் வந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் ரூ.86 கோடி மதிப்பிலான புதிய ரூ.2000 நோட்டுக்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக்ஸிஸ் வங்கி கிளையில் 20 போலி நிறுவனங்கள் பெயரில் ரூ. 60 கோடி சிக்கியது.
டெல்லியின் புறநகர் பகுதியான உத்தர பிரதேசத்தில் உள்ள நொய்டாவில் அமைந்துள்ள ஆக்ஸிஸ் வங்கி கிளையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலியாக உருவாக்கப்பட்ட 20 நிறுவனங்கள் பெயரில் உள்ள வங்கி கணக்குகளில் ரூ. 60 கோடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்று ஏஎன்ஐ செய்தி வெளியிட்டு உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.