ரோஹிங்ய மக்கள் சட்டவிரோதமாக நாட்டில் நுழைந்து தங்கியுள்ளனர், அவர்களை குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என மாநில அரசுகளுக்கு ஒரு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.
இன்று (10.10.2017) புது டெல்லியில் உள்ள மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அவர்களை தமிழ்நாடு கவர்னர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து பேசினார். அப்பொழுது கவர்னர் பன்வாரிலால் புரோகித், தஞ்சாவூர் பிரஹாதேஸ்வரர் ஆலயத்தின் பிரதி நினைவுச்சின்னம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கினார்.
இந்த சந்திப்பு ஒரு மரியாதை நிமித்தமாக சந்திப்பு என தெரிவிக்கப்பட்டது.
தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பொறுப்பேற்ற பிறகு, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராஜநாத் சிங் அவரை சந்திக்க அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய பாதுகாப்பு படைகள் நாட்டின் பிராந்தியங்களை தைரியமாக பாதுகாக்க முடியும் என்று உள்துறை மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
இந்திய-திபெத்திய எல்லைக் காவல்துறை (ITBP) ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற உள்துறை மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேசியதாவது:
நமது பாதுகாப்புப் படைகள் இந்திய எல்லைகளை பாதுகாப்பதற்கான அனைத்து சக்தியையும் கொண்டுள்ளன என்றும், குளிராக இருந்தாலும், வெயிலாக இருந்தாலும் நமது வீரர்கள் சோர்வடைவதில்லை. நமிடம் அத்தகைய தைரியமான துணிச்சலான வீரர்கள் உள்ளனர்.
பாதுகாப்பு இல்லாமல் எதை மறைக்க ராகுல் காந்தி வெளிநாடு சென்று முயற்சி செய்கிறார் என்பதை தெரிந்து கொள்ள நாட்டு மக்கள் ஆர்வமாக உள்ளதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்து உள்ளார்.
இன்று லோக்சபாவில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கார் வீச்சு சம்பவம் குறித்து எதிரொலித்தது. இது குறித்து காங்கிரஸ் எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
காங்கிரஸின் லோக்சபா தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே பேசும்போது, ஒரு கல் பட்டிருந்தாலும், ராகுல் உயிர் இழந்திருப்பார் என குற்றம்சாட்டினர்.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா தாக்குதலில் பலியான மத்திய ரிசர்வ் படை போலீசார் 12 பேரின் குடும்பத்தினருக்கு நடிகர் அக்ஷய் குமார் தலா 9 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.
நக்சலைட்டுகள் அதிகம் நிறைந்த பகுதியான சுக்மா மாவட்டத்தில் உள்ள பெஜ்ஜி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட காட்டுப்பகுதியில் சாலை கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளுக்கு துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது இன்று நக்சலைட்கள் நக்சலைட்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது பேர் வீர மரணம் அடைந்தனர்.
எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் தங்களுக்கு ரொட்டியும், டீயும் மட்டுமே உணவாக வழங்கப்படுவதாகவும், பெரும்பாலும் வெறும் வயிற்றுடனே தூங்க செல்வதாகவும் வீடியோ மூலம் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் ரூ 500 , ரூ 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நேற்று கோவை அடிக்கல் நட்டு விழாவில் நரேந்தர மோடி கண்ணீர் விட்டு உணர்ச்சிகரமாக பேசினார்.
நேற்று நள்ளிரவில் வங்கிகளில் நடைபெறும் பண பரிவர்த்தனை தொடர்பாக பிரதமர் மோடி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
கடந்த சில நாட்களாக காஷ்மீரில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதிகளில் உள்ள இந்திய கிராமங்களை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்துகிறது. நேற்று நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் 8 பேர் உயிர் இழந்தனர். இதனையடுத்து இதற்க்கு பதிலடி கொடுக்க இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் தாக்குதல் நடத்தினர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.