சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா தாக்குதலில் பலியான மத்திய ரிசர்வ் படை போலீசார் 12 பேரின் குடும்பத்தினருக்கு நடிகர் அக்ஷய் குமார் தலா 9 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.
நக்சலைட்டுகள் அதிகம் நிறைந்த பகுதியான சுக்மா மாவட்டத்தில் உள்ள பெஜ்ஜி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட காட்டுப்பகுதியில் சாலை கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளுக்கு துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமை காலையில் துணை ராணுவ அமைப்பான சி.ஆர்.பி.எப். வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெஜ்ஜி மற்றும் கொட்டச்செரு கிராமங்களுக்கு இடையே சென்றுகொண்டிருந்த போது அங்கு வந்த நக்சலைட்டுகள், பாதுகாப்பு படையினர் மீது சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை வீசி தாக்கினர்.
இதில் நிலைகுலைந்த வீரர்கள் சுதாரிப்பதற்குள், அவர்கள் மீது நக்சலைட்டுகள் இடைவிடாமல் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 12 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு நடிகர் அக்ஷய் குமார் தலா 9 லட்சம் வீதம் ஒரு கோடியே 8 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.
அக்ஷய் குமாரின் இந்த நிதியுதவிக்கு, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
I thank Shri @akshaykumar on donating a generous amount for the welfare of the families of CRPF martyrs who lost their lives in Sukma https://t.co/sVrp6RGiFd
— Rajnath Singh (@rajnathsingh) March 16, 2017
The generosity of Shri @akshaykumar is highly commendable. This gesture will inspire others to come forward & help the families of martyrs
— Rajnath Singh (@rajnathsingh) March 16, 2017