ரஜினிகாந்துக்கு 100-வது நாள் கேடயம்- தர்மதுரை குழு

Last Updated : Jan 7, 2017, 05:00 PM IST
ரஜினிகாந்துக்கு 100-வது நாள் கேடயம்- தர்மதுரை குழு title=

1991-ம் ஆண்டு வெளியாகி வெள்ளி விழா கொண்டாடிய படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தர்மதுரை. ரஜினியுடன் கவுதமி, எம்எஸ் மது, செந்தில், சரண்ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ரஜினியின் காமெடியும் உணர்ச்சிகரமான நடிப்பும் பார்த்தவர்களை பரவசப்படுத்திய படம். 

இந்நிலையில் அந்தப் படத்தின் தலைப்பில் விஜய் சேதுபதியை வைத்து இயக்குநர் சீனு ராமசாமி படம் இயக்கினார். சீனு ராமசாமிக்கு இந்தப் படம் வெற்றியை தந்தது.  

விஜய் சேதுபதி நடித்த இந்த தர்மதுரை வெற்றிபெற்றதை அடுத்து அப்படத்தின் 100-ம் நாள் கேடயத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு அளிக்க வேண்டும் என விரும்பினர் படக்குழுவினர். 

அதை மனமகிழ்ந்து ஏற்றுக் கொண்ட ரஜினி, தர்மதுரை படக்குழுவினரை வாழ்த்தினார். தர்மதுரை படத்தின் தயாரிப்பாளர் ஆர் கே சுரேஷ், இயக்குநர் சீனு ராமசாமி, படத்தின் கதாநாயகன் விஜய் சேதுபதி ஆகியோரைப் பாராட்டினார் ரஜினி. 

Trending News