கோவா மாநில முதல் அமைச்சர் மனோகர் பாரிக்கர் போட்டியிட்ட பனாஜி சட்டப் பேரவை இடைத் தேர்தலில் வெற்றி பெற்று உள்ளார்.
கடந்த வாரம் 23-ம் தேதி கோவா மாநிலத்தின் பனாஜி, வல்போய் ஆகிய தொகுதிகளில் சட்டப் பேரவை இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கிரீஷ் சோதங்கரையும், கோவா சுரக்ஷா மஞ்ச் கட்சி வேட்பாளர் ஆனந்த் ஷிரோத்கரையும் எதிர்த்து மனோகர் பாரிக்கர் போட்டியிட்டனர்.
இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை பனாஜி நகர கேளிக்கை மன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது.
புதுடெல்லி: பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அருண் ஜேட்லிக்கு கூடுதல் பொறுப்பாக பாதுகாப்பு துறை வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் கோவா முதல்வராக இன்று பொறுப்பேற்க உள்ளார். இதனால் மத்திய அமைச்சர் பதவியை அவர் நேற்று ராஜினாமா செய்தார்.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசில் 2-வது முறையாக பாதுகாப்பு துறையை கூடுதல் பொறுப்பாக அருண் ஜேட்லி ஏற்றுள்ளார்.
கோவா சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், பாஜக 13 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில், அங்கு பிற கட்சிகளுடன் இணைந்து ஆளுநரிடம் ஆட்சியமைக்கக் கோரியது பாஜக இதையடுத்து, ஆட்சியமைக்க பாஜக-வுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 21 இடங்கள் இருந்தால் மட்டுமே ஆட்சியமைக்க முடியும் என்ற நிலையில், 22 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக மனோகர் பாரிக்கர் கூறியிருந்தார்.
மேற்கு வங்கம் மாநிலத்தில், ராணுவம் குவிக்கப்பட்டதாகக் கூறி மம்தா பானர்ஜி எழுப்பியுள்ள சர்ச்சையால் அதிர்ச்சி அடைந்துள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
ராணுவ பராமறிப்பு பணிகள் மற்றும் மறு விநியோகம் போன்ற பணிகளை மேற்கொள்ள இரு நாட்டின் தரை, வான் மற்றும் கடல் தளங்களை ஒருவருக்கொருவர் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் இந்தியாவும், அமெரிக்காவும் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தால் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவு அதிகரிக்கும் என தெரிகிறது.
இந்த ஒப்பந்த ஏற்பாட்டின்படி, அமெரிக்க ராணுவத்தினர் இந்தியாவில் இருந்து பணியாற்றும் சூழல் தற்போது இல்லை என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஆஷ் கார்டரும் தெரிவித்துள்ளனர்.
இந்திய கடற்படைக்கு ஸ்கார்பீன் என்னும் 6 அதிநவீன ரக நீர்மூழ்கி கப்பல்களை வாங்குவதற்காக பிரான்ஸ் நாட்டின் கப்பல்கள் கட்டும் நிறுவனமான டி.சி.என்.எஸ். உடன் 2011-ம் ஆண்டு மத்திய அரசு ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த 6 கப்பல்களுக்கான ஒப்பந்த தொகையின் அப்போதைய மதிப்பு 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் ரூ.20 ஆயிரம் கோடி ஆகும்.
இந்த கப்பல்கள் விரைவில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளன. தற்போது இந்த நீர்மூழ்கி கப்பல்களை டி.சி.என்.எஸ். நிறுவனம் சோதனைரீதியில் இயக்கி வருகிறது.
இந்திய கடற்படைக்காக பிரான்ஸ் நிறுவனம் தயாரித்த ஸ்கார்ப்பியன் நீர்முழ்கி கப்பல் தொடர்பான ஆவணங்கள் ஆஸ்திரேலிய பத்திரிகையின் இணையதளத்தில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
நாட்டின் 70-வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தையொட்டி, டில்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடி ஏற்றினார்.
நாட்டின் 70-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் டில்லி செங்கோட்டையில் துவங்கியது. முப்படைகளின் அணிவகுப்பை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து டில்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடி ஏற்றினார்.
சென்னை - தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து 29 பேருடன் ஜூலை 22ம் தேதி அந்தமான் நோக்கிச் சென்ற ஏஎம் - 32 ரக விமானப்படை விமானம் மாயமானது. அதனை தேடும் பணி தொடர்ந்து வருகிறது. காணாமல் போன விமானத்தை தேட அமெரிக்க பாதுகாப்பு படையின் உதவியை நாடப் போவதாக மத்திய அரசு நேற்று தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.