பாகிஸ்தான் செல்வது என்பது நரகத்திற்கு செல்வதற்கு சமம் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் பாரிக்கர் கூறியுள்ளார்.
அண்மையில் சார்க் மாநாடுகளின் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள பாகிஸ்தான் சென்ற ராஜ்நாத்சிங் பாகிஸ்தான் அவமரியாதை செய்தது. அவருடைய பேட்டியை ஒளிபரப்பவும் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இது கடும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே, வரும் 25 மற்றும் 26-ஆம் தேதிகளில் இஸ்லாமாபாத்தில் நடக்கும் சார்க் மாநாட்டில் நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி கலந்து கொள்வதாக இருந்தது. தற்போது இந்த பயணத்தை அருண் ஜெட்லி ரத்து செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர்:- 'எப்போதும் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருகிறது. அதற்கான பிரதிபலனையும் அந்த நாடு அனுபவித்து வருகிறது. திங்கள் கிழமை நமது வீரர்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 5 பேரை ஓட ஓட விரட்டினர். பாகிஸ்தானுக்கு செல்வது நரகத்திற்கு செல்வதற்கு சமம்.
எங்களை தாக்கினால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். பதிலடி கொடுப்போம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது” இவ்வாறு அவர் பேசினார்.