கோவாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சுப்ரீம்கோர்ட் உத்தரவு!

Last Updated : Mar 14, 2017, 12:42 PM IST
கோவாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சுப்ரீம்கோர்ட் உத்தரவு! title=

கோவா சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், பாஜக 13 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில், அங்கு பிற கட்சிகளுடன் இணைந்து ஆளுநரிடம் ஆட்சியமைக்கக் கோரியது பாஜக இதையடுத்து, ஆட்சியமைக்க பாஜக-வுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 21 இடங்கள் இருந்தால் மட்டுமே ஆட்சியமைக்க முடியும் என்ற நிலையில், 22 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக மனோகர் பாரிக்கர் கூறியிருந்தார்.

கோவாவில் ஆட்சி அமைக்க பாஜக உரிமை கோரியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. 

மனு தாக்கல் செய்துள்ள காங்கிரஸ், ஏன் ஆளுநரை ஏன் சந்தித்து தங்கள் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறித்து தெரிவிக்கவில்லை மெஜாரிட்டி என்பது உறுப்பினர்கள் எண்ணிக்கையை பொறுத்தது தான். தங்களின் எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கையை அபிடவிட்டாக தாக்கல் செய்யுங்கள். பாஜக உரிமை கோரியதை கேள்வி கேட்க முடியாது. காங்கிரசின் எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கையை கவர்னரிடம் கொடுங்கள். இவ்வாறு நீதிபதிகள் அறிவுரை வழங்கினர். அதே நேரத்தில் பாஜக-வை மெஜாரிட்டியை நிரூபிக்க உடனே அழைக்க வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதில் காலம் தாழ்த்தக்கூடாது. இடைக்கால சபாநாயகரை நியமிக்கலாம். இவ்வாறு நீதிபதிகள் கூறினர். 

இந்நிலையில் கோவாவில் வருகின்ற 16-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவரது தலைமையிலான அரசு இன்று பதவியேற்ற தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

Trending News