சர்ஜிக்கல் ஸ்டிரைக்: ராணுவமும், பிரதமரம் தான் முக்கிய பங்கு

-

Last Updated : Oct 12, 2016, 03:57 PM IST
சர்ஜிக்கல் ஸ்டிரைக்: ராணுவமும், பிரதமரம் தான் முக்கிய பங்கு title=

மும்பையில் 2016 (மெட்டீரியல்ஸ் இன்ஜினியரிங் டெக்னாலஜி) மாநாடு நிகழ்ச்சியில் ஒன்றில் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் பற்றி உரையாடினார்.  அப்போது அவர் கூறியதாவது:-

இதற்கான பெருமை மற்றும் பாராட்டு அனைத்தும் ராணுவ படை மற்றும் பிரதமர் மோடியையே சேரும் என்று மனோகர் பாரிக்கர் தெரிவித்தார். சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நடத்தியது ராணுவத்தினர் மட்டுமே, அரசியல் கட்சியினர் சேர்ந்தவர்கள் அல்ல என்று மனோகர் பாரிக்கர் கூறினார். சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கு கிடைத்த பாராட்டுக்கள் பிரதமர் மோடி மற்றும் ராணுவ படைகளையே சேரும் என மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் யூரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்; அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பயங்கரவாதிகள் 7 முகாம்களை அதிரடி தாக்குதல் நடத்தி இந்திய ராணுவம் அழித்தது. இதற்க்கு சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்று பெயரிட்டுருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News