கோவாவின் முதல் அமைச்சர் ஆனார் மனோகர் பரிக்கர்

கோவாவின் புதிய முதல்வராக மனோகர் பரிக்கர், இன்று மாலை பதவியேற்றுக் கொண்டார்.

Last Updated : Mar 14, 2017, 05:49 PM IST
கோவாவின் முதல் அமைச்சர் ஆனார் மனோகர் பரிக்கர் title=

பனாஜி: கோவாவின் புதிய முதல்வராக மனோகர் பரிக்கர், இன்று மாலை பதவியேற்றுக் கொண்டார்.

கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக-வை சேர்ந்த மனோகர் பரிக்கர் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவரை பதவியேற்க வரும்படி கவர்னர் மிருதுளாவும் அழைப்பு விடுத்தார். ஆனால், இதை எதிர்த்து காங்கிரஸ், தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. 

பரிக்கர் முதல்வராக பதவியற்க, சுப்ரீம் கோர்ட் தடை விதிக்கவில்லை. எனினும், வரும், 16ம் தேதி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி உத்தரவிட்டது. இதையடுத்து, இன்று மாலை மனோகர் பரிக்கர், பனாஜி நகரில் உள்ள ராஜ்பவனில் நடந்த விழாவில், முதல்வராக பதவியற்றுக் கொண்டார். இவர் நான்காவது முறையாக முடல்வாக தேர்வு ஆகியுள்ளர்.

அவருக்கு கவர்னர் மிருதுளா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 8 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். 

Trending News