இந்திய கடற்படைக்கு ஸ்கார்பீன் என்னும் 6 அதிநவீன ரக நீர்மூழ்கி கப்பல்களை வாங்குவதற்காக பிரான்ஸ் நாட்டின் கப்பல்கள் கட்டும் நிறுவனமான டி.சி.என்.எஸ். உடன் 2011-ம் ஆண்டு மத்திய அரசு ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த 6 கப்பல்களுக்கான ஒப்பந்த தொகையின் அப்போதைய மதிப்பு 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் ரூ.20 ஆயிரம் கோடி ஆகும்.
இந்த கப்பல்கள் விரைவில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளன. தற்போது இந்த நீர்மூழ்கி கப்பல்களை டி.சி.என்.எஸ். நிறுவனம் சோதனைரீதியில் இயக்கி வருகிறது.
இந்நிலையில் 2011-ம் ஆண்டிலிருந்து தப்போது வரையிலான கடற்படை ரகசியங்கள் குறித்த விபரம் 22,400 பக்கள் கொண்ட ஆவணங்களை ‘தி ஆஸ்திரேலியன்‘ இணைய தளம் வெளியிடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் இந்திய கடல்பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது. நீர்மூழ்கி கப்பல்களின் ரகசியம் வெளியானதால் மத்திய அரசு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. இதுபற்றி விசாரணை நடத்தும்படி பாதுகாப்பு மந்திரி பாரிக்கர் உத்தரவிட்டு உள்ளார்.
இந்நிலையில் கப்பலை கட்டிவரும் மசகான் கப்பல் கட்டும் நிறுவனம்(எம்டிஎல்) எங்களுடைய தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை என்று கூறியுள்ளது. ஸ்கார்பீன் நீர்மூழ்கி கப்பல் ரகசியங்கள் கசிவு விவகாரத்தில் நாங்கள் விசாரணைக்கு கடற்படை அதிகாரிகளுக்கு உதவி செய்து வருகிறோம். எங்களுடைய தரப்பில் இருந்து தகவல் தரவுகள் வெளியாகவில்லை. கசிவான தகவல்கள் அதிகாரப்பூர்வமானது தானா என்பதை ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்று எம்டிஎல் அதிகாரிகள் கூறி உள்ளனர். எம்டிஎல் தகவல் தரவு பாதுகாப்பிற்கு கடுமையான விதிமுறைகள் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.