ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு பதிலாக, ஜனநாயகத்தை சிதைக்க சில பத்திரிகையாளர் செயல்படுவது என்பது மிகவும் வருத்தமளிக்கிறது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சபரிமலை விவகாரத்தில் யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம். வன்முறையில் ஈடுபடுவோர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கேரளா போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
பல்வேறு சர்ச்சைகளுக்கு பதில் அளிக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று டெல்லி செல்வதாக இருந்தது. இந்நிலையில் இந்தப் பயணத்தை அவர் ரத்து செய்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் தலைவிரித்து ஆடி வரும் மணல் மாஃபியா குறித்து செய்திகள் எழுதி வந்த பத்திரிக்கையாளர் சந்தீப் ஷர்மா லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ளார்!
2 வருடங்களுக்கு முன் மாயமான பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மீட்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் காணாமல் போன இந்தியரை மீட்க பல்வேறு முயற்சிகள் எடுத்த பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் கடத்தப்பட்டார். இந்நிலையில் 2 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லை அருகே அவர் மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த செப் 6-ஆம் தேதி பிரபல பத்திரிகையாளர் மற்றும் சமூக ஆர்வலரான கவுரி லங்கெஷ், தனது வீட்டில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லபட்டார். இவர் கன்னட மொழியில் வெளியாகும், 'லங்கேஷ் பத்திரிகே' பத்திரிக்கையின் ஆசிரியராகவும் இருந்து வந்தார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல அரசியல் கட்சிகளும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு குழு அமைக்கப்பட்டது. கர்நாடக அரசு உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை ஒன்றை அனுப்பிவைத்துள்ளது.
மூத்த பத்திரிகையாளர் கே.ஜே. சிங் மற்றும் அவரது 92 வயது தாய் இருவரும் இன்று(சனிக்கிழமை) மொஹலலியில் உள்ள அவரது இல்லத்தில் சடலமாக கண்டெடுக்கப் பட்டுள்ளனர்.
ANI அறிக்கையின்படி, இருவரும் கொடுரமான நிலையினில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து, ஷிமிமாணி அகாலித் தலைவர் சுகுபிர் சிங் பாதல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது, "மூத்த பத்திரிகையாளர் கே.ஜே. சிங் அவரது தாயுடன் கொலை செய்யப்பட்டது பெரும் வருத்தத்தினை ஏற்படுத்துகிறது" என பதிவிட்டுள்ளார்.
பிகாரில் ராஷ்ட்ரிய சஹாரா நாளிதழில் பணிபுரியும் உள்ளூர் பத்திரிகையாளர் பங்கஜ் மிஸ்ரா சுட்டுக் கொல்லப்பட்டார்.
ராஷ்ட்ரிய சஹாரா நாளிதழில் பணிபுரியும் பத்திரிகையாளர் பங்கஜ் மிஸ்ரா, பீகார் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள பேங்கில் இருந்து 1 லட்சம் பணம் எடுத்துகொண்டு வரும் வழியில், பைக்கில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டினர். பின்னர் அவரிடம் இருந்த பணத்தை பறித்துக்கொண்டு சென்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
‘லங்கேஷ் பத்திரிகே’ ஆசிரியர் பெங்களூருவில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
இந்துத்துவா வகுப்புவாத மதவெறிக் கும்பலின் ரத்த வெறிக்கு மேலும் ஒரு சிந்தனையாளர் பலி ஆகி உள்ளார். கன்னட பத்திரிகையான ‘லங்கேஷ் பத்திரிகே’ வார இதழின் நிறுவனரும், முதன்மை ஆசிரியருமான ‘கௌரி லங்கேஷ்’ பெங்களூருவில் செப்டம்பர் 5-ம் தேதி இரவு தனது வீட்டில் இருந்தபோது, மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டு இருக்கிறார்.
பீகார் பத்திரிகையாளரான ராஜதேவ் ரஞ்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் (ஆர்.ஜே.டி) தலைவர் முகம்மது ஷாபுபூதின் மீது சிபிஐ குற்றச்சாட்டு வழக்கு பதிவு செய்துள்ளது.
குற்றவியல் சதி மற்றும் கொலை தொடர்பான ஐபிசி பிரிவுகளின் கீழ் ஷாபுபூதின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட இன்னும் சில குற்றவாளிகளும் இந்த வழக்கில் விசாரிக்கப்பட்டனர்.
மே 13, 2016 அன்று பத்திரிகையாளரான ராஜதேவ் ரஞ்சன், சியாணியில் வேலை முடிந்த வீட்டுக்கு திரும்பிவருகையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பத்திரிகையாளர்களுக்கு தகுந்த காலத்தில் ஓய்வூதியம் தராமல், ஓய்வூதியம் உயர்த்தி என்ன பயன்? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் பத்திரிகையாளர்களின் மாத ஓய்வூதியம் 8,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாகவும், குடும்ப ஓய்வூதியம் 4750 ரூபாயிலிருந்து 5000 ரூபாயாகவும் உயர்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்திருக்கிறார். பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் உயர்த்தப்படுவது வரவேற்கத்தக்கது தான் என்ற போதிலும், இதனால் பயனடைவோரின் எண்ணிக்கையை நினைக்கும் போது ஏமாற்றமே மிஞ்சுகிறது.
2.0 படப்பிடிப்பு தளத்தில் செய்தியாளர் தாக்கப்பட்டதற்கு இயக்குனர் ஷங்கர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஷங்கர் இயக்கி வரும் 2.0 படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னை திருவல்லிக்கேணியில் நடந்தது. அந்த இடத்தில் பொது மக்களுக்கு இடையூறு தரும் வகையில் வாகனங்கள் ஏராளமாக நின்றன. இதை பார்த்த முன்னணி நாளிதழின் செய்தியாளர் ஒருவர் வாகனங்களை புகைப்படம் எடுத்துள்ளார். இதை பார்த்த படக்குழுவினர் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் செய்தியாளர் தரப்பில் ஐஸ்ஹவுஸ் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் ஷங்கரின் உறவினர் பப்புவை காவல்துறையினர் கைது செய்தனர்.
காஷ்மீரில் ஏற்பட்ட கலவரம் காரணமாக அங்கு பதற்றம் நிலவுகிறது. இதனையடுத்து அங்கு அமைதி ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று காஷ்மீர் சென்றார். பல முக்கிய தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதனைத்தொடர்ந்து ராஜ்நாத்தும், மெஹ்பூபாவும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.