கார்ட்டூனிஸ்ட் பாலா மற்றும் சென்னை பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் மீது மீண்டும் வழக்கு தொடரப்பட்டுள்ளது!
சென்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன் என்கிற பாலா. கேலிச்சித்திரக்காரராக பணியாற்றும் இவர் சில தினங்களுக்கு முன்பு கந்துவட்டி பிரச்சணை காரணமாக உயிர்யிழந்த நெல்லை இசக்கிமுத்து குடும்பத்தினருக்கு ஆதரவாக கேலிச் சித்திரம் வரைந்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
தற்போது அவர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த 7-ஆம் தேதி, பாலா கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்பொழுது பாலாவின் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரத்தினை பேனராக பயன்படுத்தினர்.
Chennai: Another FIR registered against Cartoonist Bala and journalists protesting against the arrest of Bala. The cartoonist was arrested for drawing a cartoon criticizing TN CM
— ANI (@ANI) November 28, 2017
அனுமதி பெறாமல் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரத்தினை பேனராக பயன்படுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கார்ட்டூனிஸ்ட் பாலா மற்றும் சென்னை பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் மீது மீண்டும் வழக்கு தொடரப்பட்டுள்ளது!