தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்து இன்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரை வெடிக்கலாம்.
பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தின் படாலாவில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்ப்பட்ட வெடி விபத்தில் 18 பேர் இறந்துவிட்டதாகவும், மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
பட்டாசு ஆலைகளிலும், அவை சார்ந்த பிற தொழில்களிலும் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்து வருவதால், அவர்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்தித் தர வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட தீபாவளி அன்று கூடுதல் நேரம் மற்றும் அதிகாலையில் பட்டாசு வெடிக்க அனுமதிகோரி மனு மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற உள்ளது.
டெல்லியில் சட்டவிரோதமாக பட்டாசுகளை விற்பனை செய்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த அக்டோபர் 13-ம் தேதி அன்று டெல்லியில் தீபாவளி பண்டிகையையொட்டி அக்டோபர் 31 வரை பட்டாசுக் கடைகள் திறக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
தீபாவளி பண்டிகையின்போது வெடிக்கப்படும் பட்டாசுகளால் ஒளி மற்றும் காற்று மாசு ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போடப்பட்டது.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றத்தில், டெல்லி மற்றும் அதனை சுற்றி உள்ள என்சிஆர் பகுதிகளில் அக்டோபர் 31 வரை பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து.
டெல்லியில் தீபாவளி பண்டிகையையொட்டி அக்டோபர் 31 வரை பட்டாசுக் கடைகள் திறக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தீபாவளி பண்டிகையின்போது வெடிக்கப்படும் பட்டாசுகளால் ஒளி மற்றும் காற்று மாசு ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போடப்பட்டது.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றத்தில், டெல்லி மற்றும் அதனை சுற்றி உள்ள என்சிஆர் பகுதிகளில் அக்டோபர் 31 வரை பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பட்டாசு விற்பனையாளர்கள் மனுதாக்கல் செய்தனர்.
டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு விற்பனைக்கு நிரந்தரத் தடையை சுப்ரீம் கோர்ட் இன்று விதித்து. பட்டாசு வெடிப்பதால் மாசைக் கட்டுப்படுத்தக் கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த பல நடவடிக்கை எடுக்கும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று இது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டில் வந்தது அப்போது டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு விற்பனைக்கு நிரந்தரத் தடையை சுப்ரீம் கோர்ட் விதித்து.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில், 2 பேர் உயிரிழந்தனர்.
சிவகாசி, சாத்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஏராளமான பட்டாசு, தீப்பெட்டி ஆலைகள் உள்ளன. இன்று காலையில் ஏழாயிரம்பண்ணையில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் சில அறைகள் தரைமட்டமாகின.
வெடி விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு தீயை அணைக்க கடுமையாக போராடினர். படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிலரை சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிவகாசி புறவழிச்சாலையில் உள்ள பட்டாசுக் கிட்டங்கியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 10-க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்டாசுகள் வெடிக்க தொடங்கியதை அடுத்து கிடங்கில் உள்ள தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். தீயை அணைக்க 2 தீயணைப்பு வாகனத்தில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசுகள் வெடித்துச் சிதறுவதால் தீயணைப்பு வீரர்களால் கிட்டங்கியை நெருங்க முடியவில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.