பட்டாசு வெடிக்கும் நேரம்: காலை 6 டு 7 வரை; மாலை 7 டு 8 வரை; மீறினால் அபராதம்

தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்து இன்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரை வெடிக்கலாம். 

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 23, 2019, 01:18 PM IST
பட்டாசு வெடிக்கும் நேரம்: காலை 6 டு 7 வரை; மாலை 7 டு 8 வரை; மீறினால் அபராதம் title=

சென்னை: தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்து இன்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரை வெடிக்கலாம். 

தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், அதேபோல மாலை 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். அதாவது இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும், மற்ற நேரங்களில் பட்டாசு வெடிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறி பட்டாசு வெடித்தால் அபராதம் விதிக்கப்படும் எனவும் தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல தான் கடந்த ஆண்டும் (2018) தமிழக அரசு சார்பாக தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே நேற்று, மத்திய அரசு சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், சீன நாட்டு பட்டாசுகளை விற்கவும் கூடாது, அதை வாங்கவும் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் விதியை மீறி சட்டவிரோத சீன நாட்டு பட்டாசுகளை இறக்குமதி செய்யவோ அல்லது விற்கவோ கூடாது எனவும் கேட்டுக்கொண்டுள்ளது. நாடு முழுவதும் காற்றின் தரம் மோசமடைந்து வருவதால், இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது எனவும் கூறப்பட்டு உள்ளது. 

சுங்க சட்டம் 1962 இன் கீழ் சீன நாட்டு பட்டாசுகளை இறக்குமதி செய்யவோ அல்லது விற்கவோ கூடாது. மீறினால் அது தண்டனைக்குரிய குற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Trending News