பாராளுமன்ற மைய மண்டபத்தில் நள்ளிரவில் அறிமுக விழா சரக்கு, சேவை வரி அமலுக்கு வந்ததுநாட்டில் முதன் முதலாக, நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிக்க வகை செய்யும் ஜிஎஸ்டி இன்று நள்ளிரவு முதல் அமலானது.
பாராளுமன்றத்தில் நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் பிரதமர் நரேந்திர மோடியும் சேர்ந்து இதனை தொடங்கி வைத்தனர்.
நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி வரியை நாளை(ஜூலை 1-ம் தேதி) முதல் அமல்படுத்தப்படுகிறது.
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்துவதற்காக இன்று நள்ளிரவு பாராளுமன்றத்தில் சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி முன்னிலை வகிக்கிறார். பிரதமர் மோடி ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை தொடங்கி வைத்து பேசுகிறார். அதன் பிறகு நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஜிஎஸ்டி வரி குறித்து விளக்கம் அளிக்க உள்ளார்.
எஸ்பிஐ வங்கி பல்வேறு சேவைகளுக்கு அறிவித்துள்ள புதிய கட்டண விகிதங்கள் இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளன.
இலவமாக இதுவரை அளிக்கப்பட்டு வந்த ஐஎம்பிஎஸ் எனப்படும் உடனடி பணபரிமாற்ற சேவைக்கு இனிமேல் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும்.
> ஒரு லட்சம் ரூபாய் வரை 5 ரூபாய் சேவை வரி வசூலிக்கப்படும்.
> 2 லட்சம் ரூபாய் வரை 15 ரூபாய்
> 5 லட்சம் ரூபாய் வரை 25 ரூபாய்
என கட்டணம் இருக்கும்.
அதேபோல் ஏ.டி.எம். கார்டுகளை பொறுத்தவரை ரூபே கார்டுகள் மட்டுமே இலவசம். இதர கார்டுகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
ஓட்டல் விற்பனை வரி உயர்வு மற்றும் ஆன்லைன் மருந்து வர்த்தகம் ஆகியவற்றில் விரைந்து தீர்வு காண வேண்டும் என மத்திய-மாநில அரசுகளுக்கு மு.க ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுளா அறிக்கையில் கூறியதாவது:
மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி உயர்வைக் கண்டித்து தமிழகத்தில் உள்ள ஓட்டல்கள் அனைத்தும் இன்றைய தினம் மூடப்பட்டு புதிய சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்கள்.
டெல்லியில் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்தி காந்ததாஸ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாக கூறினார்.
அ.தி.மு.க., தவிர மற்ற கட்சிகள் ஜி.எஸ்.டி., மசோதாவுக்கு ஆதரவு அளிப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். ராஜ்யசபாவில் ஜி.எஸ்.டி., மசோதா சில திருத்தங்களுடன் நிறைவேறியது. இதனையடுத்து திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி., மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.