எம்டிஆர். விதிக்கும் டெபிட் கார்டு மற்றும் ஆன்லைன் ரயில் டிக்கெட்டுகளுக்கு சேவை வரி ரத்து

டெல்லியில் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்தி காந்ததாஸ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாக கூறினார்.

Last Updated : Nov 23, 2016, 01:00 PM IST
எம்டிஆர். விதிக்கும் டெபிட் கார்டு மற்றும் ஆன்லைன் ரயில் டிக்கெட்டுகளுக்கு சேவை வரி ரத்து  title=

புதுடெல்லி: டெல்லியில் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்தி காந்ததாஸ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாக கூறினார்.

எம். டி. ஆர். விதிக்கும் டெபிட் கார்டு மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கான சேவை கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு இன்று முதல் இந்தாண்டு இறுதி டிசம்பர் 31 வரை சேவை வரி ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

மத்திய அரசு பண பரிவர்த்தனையை குறைத்து ஆன்லைன் அல்லது டெபிட் கார்டு மூலம் பரிவர்த்தனை நடத்த ஊக்குவிக்கிறது. இதனை ஊக்குவிக்கும் விதமாக ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு புதன்கிழமை முதல் சேவை வரியை ரத்து செய்கிறது. இந்த சலுகை டிசம்பர் 31-ம் தேதி வரை வழங்கப்படும் என ரயில்வே அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.

இதுவரை இணையதளம் மூலம் ரெயிலில் தூங்கும் வசதி டிக்கெட் முன்பதிவுக்கு ரூ.20-ம், ஏ.சி. வசதி ரெயில் டிக்கெட்டுக்கு ரூ.40-ம் சேவை வரியாக வசூலிக்கப்பட்டது. இனி டிசம்பர் 31-ம் தேதி வரை இந்த கட்டணம் வசூலிக்கப்படாது. மேலும் எம். டி. ஆர். விதிக்கும் டெபிட் கார்டு மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கான சேவை கட்டணம் ரத்து.

Trending News