எல்லையில் சீன ராணுவத்தின் அத்துமீறலை எதிர்கொள்ள இந்தியா உஷார் நிலையில் என மத்திய அமைச்சர் தகவல் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.
எல்லையில் சீனாவின் நடவடிக்கைக் குறித்து மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? என மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதைக்குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியது,
நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில் இந்தியா மிகவும் எச்சரிக்கையாக உள்ளது. அதேசமயத்தில் சீனா தனது இராணுவத்தின் பழைய நிலைக்கு திரும்ப பெற்றால், இப்பிரச்சினையைப் பற்றி விவாதிக்கவும், பேச்சுவார்த்தை நடத்தவும் இந்தியா தயாராக உள்ளதாக கூறினார்.
கத்தார் நாட்டுடன் 5 அரபு நாடுகள் தங்கள் தூதரக உறவை துண்டிப்பதாக நேற்று அறிவித்தது.
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு கத்தார் மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக குற்றம் சாட்டி 5 அரபு நாடுகளான சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து, அமீரகம், ஏமன் தங்கள் தூதரக உறவு துண்டித்தது. இதனால், இந்த 5 நாடுகள் கத்தாருடன் தங்களது விமான சேவைகள் மற்றும் கப்பல் சேவைகளையும் ரத்து செய்தது.
பாகிஸ்தானில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குல்புஷன் ஜாதவ் (வயது 46) விடுவிக்க மத்திய அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்கும் என வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் 3-ம் தேதி பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இந்திய உளவு அமைப்பான ‘ரா’–வுக்காக உளவு பார்த்து வந்ததாக குல்புஷன் ஜாதவை பாகிஸ்தான் அதிகாரிகள் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட குல்புஷன் ஜாதவ் மீதான வழக்கு பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் அவருக்கு மரண தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
“பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர்” இந்தியாவுக்கே சொந்தம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியான கில்ஜித் பல்திஸ்தான் பகுதியை 1947-ம் ஆண்டு சட்டவிரோதமாக பாகிஸ்தான் ஆக்ரமித்துள்ளது. மக்களின் அடிப்படை உரிமை மறுக்கப்பட்டு வருகிறது.
லோக்சபாவில் நேற்று நடந்த விவாதத்தின் போது ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்பான கேள்விக்கு சுஷ்மா பதிலளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
உலக அளவில் ஆன்லைன் விற்பனை நிறுவனங்களில் முன்னிலை வகித்து வரும் நிறுவனம் அமேசான். இந்நிறுவனம், இந்திய தேசியக் கொடியை கொண்ட கால் மிதியடிகளை விற்பனை செய்து வருவதாகப் புகார் எழுந்தது.
அமேசான் நிறுவனத்தின் கனடா பிரிவு இணையதளத்தில் இந்திய தேசியக் கொடி போன்ற கால் மிதியடி விற்பனைக்கு வைக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
2016-ம் ஆண்டுக்கான "சர்வதேச சிந்தனையாளர்" பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
இந்தியாவின் வெளியுறவு அமைச்சராக சுஷ்மா சுவராஜ் பதவியேற்ற கையோடு டுவிட்டரில் தனது துறை ரீதியான பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதுடன், அவர்களது கோரிக்கைகளை பரிசீலித்து, அதன் மீது உரிய நடவடிக்கையும் எடுக்கவும் உத்தரவிட்டார். எந்த பிரச்னையாக இருந்தாலும் அதன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் மட்டுமன்றி வெளிநாட்டவர்கள் அளிக்கும் கோரிக்கைகளையும் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க முயற்சி செய்து வருகிறார்.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நலன் பெற மு.க ஸ்டாலின் வாழ்த்து
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பூரண நலன் பெற திமுக பொருளாளர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
தற்போது அவர் சிறுநீரக கோளாறு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் கனவு பலிக்காது என ஐ.நா., பொதுச்சபைக் கூட்டத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.
ஐ.நா., சபையில் பேசியதாவது:- உலகளவில் வறுமையும் சுகாதார பிரச்னைகளும் மிகப்பெரிய சவாலாக உள்ளன. இந்தியாவில் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக துாய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அத்திட்டத்தில் 2 லட்சம் பள்ளிகளில் 4 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
- எனது மனைவி பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டதால் துருக்கி ஏர்லைன்சில் நான் தனியாகவே பயணிக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் எனது மனைவி போட்டோவை பக்கத்து சீட்டில் வைத்தபடி, இப்படித்தான் மனைவியோடு டிராவல் செய்கிறேன் என்ற ஒரு போட்டோவையும், டிவிட்டரில் வெளியிட்டு அதை வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், வெளியுறவு அமைச்சக டுவிட்டர் ஹேண்டில்களுடன் டேக் செய்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.