மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நலம் பெற ஸ்டாலின் வாழ்த்து!

Last Updated : Nov 17, 2016, 01:47 PM IST
மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நலம் பெற ஸ்டாலின் வாழ்த்து! title=

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நலன் பெற மு.க ஸ்டாலின் வாழ்த்து

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பூரண நலன் பெற திமுக பொருளாளர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

தற்போது அவர் சிறுநீரக கோளாறு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று தனது நலனை குறித்து அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியதாவது:-  டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான மருத்துவ பரிசோதனைகளும் நடந்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். 

 

 

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுஷ்மா சுவராஜ் பூரண நலன் பெற திமுக பொருளாளர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில்:- நம்முடைய மரியாதைக்குரிய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மோசமான உடல் நிலையில் இருந்து மீண்டு, பூரண நலம் பெற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

Trending News