15 வருட காதல்-சீக்கிரமே திருமணம்? விஷாலுடன் நெருக்கமாக நடித்த அபிநயா பேட்டி..

Actress Abhinaya About Her Boyfriend : தமிழ் திரையுலகில் கவனம் ஈர்க்கும் சில கதைகளின் நடித்து பிரபலமானவர் அபிநயா. இவர் கொடுத்துள்ள பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Written by - Yuvashree | Last Updated : Jan 29, 2025, 03:51 PM IST
  • அபிநயா-விஷால் காதல் வதந்தி..
  • முற்றுப்புள்ளி வைத்த நடிகை..
  • 15 வருடங்களாக ஒருவரை காதலிக்கிறாராம்..
15 வருட காதல்-சீக்கிரமே திருமணம்? விஷாலுடன் நெருக்கமாக நடித்த அபிநயா பேட்டி.. title=

Actress Abhinaya About Her Boyfriend : நாடோடிகள் படத்தில் நடித்த புது முகத்தை சமுத்திரக்கனி தேடிக்கொண்டிருந்த போது அவர் கண்ணில் பட்டவர் அபிநயா. சில விளம்பர படங்களுக்கு மாடலாக இருந்த இவர் இந்த படம் மூலமாக தான் திரையுலத்திற்குள் அறிமுகமானார். அந்த படம் வெற்றி பெற்ற பிறகு இவரது கதாபாத்திரம் பலராலும் கவனிக்கப்பட்டது. இதனாலையே இந்த படத்தின் கன்னடம் மற்றும் தெலுங்கு ரீமிக்ஸ் இவரே தனது கதாப்பாத்திரத்தில்  நடித்திருந்தார். இந்த படத்திற்காக அவருக்கு விருதுகளும் கிடைத்தன.

மாற்றுத்திறனாளி…

நடிகை அபிநயா ஒரு மாற்றுத்திறனாளி என்பது இன்றுவரை பலருக்கும் தெரியாது. காரணம் அவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் யாவும் வலிமை மிக்கவையாக இருப்பது மட்டும் கிடையாது. தன் கதாபாத்திரத்திற்கு அதற்கேற்றவாறு வாய் அசைக்கும் அவர், இத்தனை நாட்களில் தன்னால் வாய் பேச இயலாது என்ற விஷயத்தையும் பெரும்பாலும் வெளியில் கூறியதில்லை. ஒரு சமயம் விருது நிகழ்ச்சியில் அவர் சைகை மொழியில் பேசிய போதுதான் பலருக்கு இது தெரிந்தது.

2008 ஆம் ஆண்டு ஆரம்பித்து, இப்போது வரை தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர், தனுஷ் நடித்திருந்த ஷமிதாப் படம் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமானார்.

விஷாலுடன் நடித்தவர்…

நடிகர் விஷாலுக்கு 2023 ஆம் ஆண்டு கம்-பேக் படமாக அமைந்தது, மார்க் ஆண்டனி. இந்த படத்தில் இரண்டு விஷாலின் கதாபாத்திரங்கள் வரும். அதில் அப்பா விஷாலுக்கு ஜோடியாக வேதவல்லி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், அபிநயா. இதற்கு முன்பு இருந்தே இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இருவரும் ஒன்றாக சேர்ந்து ஒரு படத்தில் நடித்த உடன் ரசிகர்கள் சிலர் இந்த தகவலை உறுதியே செய்துவிட்டனர். 

அபிநயா கொடுத்த நேர்காணல்..

கடந்த சில நாட்களாக நடிகை அபிநயா, தனது வரவிருக்கும் படம் தொடர்பான நேர்காணங்களில் கலந்து கொண்டு வருகிறார். அப்படி தமிழ் ஊடகம் ஒன்றிற்கும் அவர் பேட்டி அளித்திருக்கிறார். அப்போது தனது காதலர் குறித்து பேசி அவர், தாங்கள் பதினைந்து வருடங்களாக காதலித்து வருவதாகவும், சிறுவயதிலிருந்தே நண்பர்களாக இருந்து பின்னர் காதலர்களாக மாறியதாக அவர் கூறியிருக்கிறார். அவரிடம் எந்த விஷயத்தை வேண்டுமானாலும் கூறலாம் என்றும், அவருடன் பேசும்போது மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

எப்போது திருமணம்? 

காதலர் இருக்கிறார் என்று கூறியவுடன் அவரிடம் எப்போது திருமணம் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், இப்போதைக்கு அப்படி எந்த திட்டமும் இல்லை என்றும் இன்னும் நிறைய காலம் இருப்பதாகவும் கூறினார். இதன் மூலம் இவருக்கும் விஷாலுக்கும் இடையேயான காதல் அல்லது திருமணம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார், அபிநயா.

விஷால் என்ன செய்கிறார்?

நடிகர் விஷாலின் உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றங்கள், சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வைரலானது. வெளியில் சொல்லப்படாத உடல் நலக்கோளாறு மூலம் உடல்நலம் குன்றயிருக்கும் விஷாலுக்கு, மத கஜ ராஜா படத்தின் வெற்றி, உந்துதலாக அமைந்துள்ளது. மேலும், கெளதம் மேனன் இயக்கத்தில் தான் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் அவர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க | Valentines Day 2024: ‘காதல் கண்கட்டுதே..’ காதலித்து திருமணம் செய்து கொண்ட திரை பிரபலங்கள்!

மேலும் படிக்க | தமன்னாவிற்கு திருமணம்! 38 வயது பிரபல நடிகர் மாப்பிள்ளை..யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News