சென்னையை அடுத்த எண்ணூர் அருகே 2 கப்பல்கள் மோதிக்கொண்ட சம்பவத்தில், ஒரு கப்பலில் இருந்த டீசல் கடலில் கொட்டியது. இங்கிலாந்து மேன் தீவிலிருந்து, திரவ காஸ் ஏற்றிக் கொண்டு, எண்ணுார் துறைமுகம் வந்து இறக்குமதி செய்து விட்டு திரும்பிய, எம்.டி.பி., டபிள்யூ மாப்பிள் என்ற கப்பலும், மும்பையில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றி வந்த, டான் காஞ்சிபுரம் என்ற கப்பலும், துறைமுகத்தில் இருந்து, 1.8 நாட்டிகல் மைல் தொலைவில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
சென்னை எண்ணூர் துறைமுகத்தில் இன்று இரண்டு கப்பல்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டன. எண்ணூர் துறைமுகத்தில் இருந்து 1.8 மைல் தொலைவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
எகிப்து மத்திய தரைக்கடலில் கப்பல் கடலில் மூழ்கி 42 பேர் பலியாகியுள்ளனர்.
ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து சுமார் 600 பேர் கப்பலில் மத்திய தரைக்கடல் பகுதி வழியாக ஐரோப்பா நாடுகளுக்கு அகதிகளாக சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் எகிப்து நாட்டு கடல் எல்லையில் சென்றபோது எதிர்பாராத விதமாக படகு கடலில் மூழ்கியது இதனால் பலர் உயிருக்கு போராடினர்.
இது குறித்த தகவல் எகிப்து கடற்படையினருக்கு கிடைத்ததும் அவர்கள் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.