பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று துவங்கியது. இதில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். பிறகு 2016-2௦17-ம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். இந்த அறிக்கையில் நாட்டின் பொருளாதார நிலவரம் குறித்த முழு விவரங்க உள்ளன.
பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் இன்று கூடியது. வார்தா புயல் சம்பந்தமாக விவாதிக்கப்பட்டது
டெல்லி மேல் சபையில் வார்தா புயல் பாதிப்பு குறித்த விவாதம் நடந்தது. இதில் பேசிய தமிழக எம்.பி.க்கள் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுத்தினார்.
மாநிலங்களவையில் ரூபாய் நோட்டு பிரச்சினை குறித்து விவாதம் இன்று தொடங்கியது. எதிர்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களவைக்கு நடைபெறும் விவாதத்தில் பங்கேற்றுள்ளார்.
மத்திய அரசின் ரூ 500 , ரூ 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நேற்று கோவை அடிக்கல் நட்டு விழாவில் நரேந்தர மோடி கண்ணீர் விட்டு உணர்ச்சிகரமாக பேசினார்.
நேற்று நள்ளிரவில் வங்கிகளில் நடைபெறும் பண பரிவர்த்தனை தொடர்பாக பிரதமர் மோடி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8-ம் தேதி அறிவித்தார். ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000 நோட்டுகளை அடுத்த மாதம் டிசம்பர் 30-ம் தேதி வரை வங்கிகளில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசாங்கம் மற்றும் தேசிய நலத்திர்காகவே 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் கைவிட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றுக் கொண்டது மத்திய அரசின் நேர்மையான நடவடிக்கையாகும். கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் மட்டுமே கவலைப்பட வேண்டும் என்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று பேட்டியில் கூறியுள்ளர்.
இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரிவிதிப்பு முறையை நடைமுறைப்படுத்தும், சரக்கு மற்றும் சேவை வரி மசோதா சட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஜி.எஸ்.டி., வரி விகிதம் 5%, 12% ,18%, 28% என நான்கு அடுக்கு வரி விகிதமாக நிர்ணயம் செய்ய கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த கவுன்சிலின் 2 நாள் கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஜி.எஸ்.டி., வரி விகிதம் 5%, 12% ,18%, 28% என நான்கு அடுக்கு வரி விகிதமாக நிர்ணயம் செய்ய கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பாகிஸ்தானுக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனியார் தொலைகாட்சிக்கு அவர் அளித்த பேட்டி கூறியதாவது:- 2003-ம் ஆண்டு முதல் பாகிஸ்தான் தொடர்ச்சியாக அத்துமீறி வருகிறது. பாகிஸ்தான் தனது நாட்டில் பயங்கரவா திகளுக்கு பயிற்சி அளித்து அவர்களை இந்தியாவுக்கு அனுப்பி வருகிறது. பயங்கரவாதிகளை அனுப்பி இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதையும் எப்போதும் ஏற்க முடியாது. நமக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையிலும் இதுவரை இந்தியா பொறுமையாக இருந்தது. தூதரக ரீதியில் சில முயற்சிகளை நாம் மேற்கொண்டோம். ஆனால் தற்போது நேரம் மாறி விட்டது.
பிரதமர் மோடி தலைமையில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பொது பட்ஜெட்டுடன், ரயில்வே பட்ஜெட்டை இணைத்து ஒரே பட்ஜெட்டாக தாக்கல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி செய்தியாளர்களிடம் பேசியதாவது:- இனி மேல் ரயில்வே பட்ஜெட் மற்றும் பொது பட்ஜெட் ஆகியன இணைத்து ஒரே பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படும். அதே சமயம் ரயில்வே துறை சுயமாக செயல்படும் உரிமம் தொடர்ந்து பாதுகாக்கப்படும். திட்டம் மற்றும் திட்டமிடப்படாத சீர்திருத்தங்களுக்கான அறிவிப்புக்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் பட்ஜெட் ஒன்றாக இணைக்கப்படும்.
பாகிஸ்தானில் நடக்கும் சார்க் மாநாட்டில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி கலந்து கொள்ளும் வாய்ப்பு மிகக்குறைவு என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், ஜெட்லி கலந்து கொள்வது தொடர்பான இறுதி முடிவை பிரதமர் எடுப்பார் எனக் கூறப்படுகிறது.
மேலும் ராஜ்நாத்திற்கு பாகிஸ்தானில் அளிக்கப்ப்டட வரவேற்பில் மத்திய அரசுக்கு திருப்தி ஏற்படவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.
சார்க் நாடுகளின் நிதியமைச்சர்களின் கூட்டம் இஸ்லாமாபாத்தில் வரும் 25 மற்றும் 26-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
நாட்டின் 70-வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தையொட்டி, டில்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடி ஏற்றினார்.
நாட்டின் 70-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் டில்லி செங்கோட்டையில் துவங்கியது. முப்படைகளின் அணிவகுப்பை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து டில்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடி ஏற்றினார்.
ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஒருங்கிணைந்த ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டு ஓராண்டு கடந்துவிட்டது. இதனிடையே ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பார்லிமென்டிலும் ஆந்திர எம்.பி.,க்கள் வலியுறுத்தினர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.