கரன்சி விவாதம்: ஜெட்லி எதிர்க்கட்சிக்கு கண்டனம்

மாநிலங்களவையில் ரூபாய் நோட்டு பிரச்சினை குறித்து விவாதம் இன்று தொடங்கியது. எதிர்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களவைக்கு நடைபெறும் விவாதத்தில் பங்கேற்றுள்ளார். 

Last Updated : Nov 24, 2016, 04:08 PM IST
கரன்சி விவாதம்: ஜெட்லி எதிர்க்கட்சிக்கு கண்டனம்  title=

புதுடெல்லி: மாநிலங்களவையில் ரூபாய் நோட்டு பிரச்சினை குறித்து விவாதம் இன்று தொடங்கியது. எதிர்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களவைக்கு நடைபெறும் விவாதத்தில் பங்கேற்றுள்ளார். 

ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும் சரியான வழிகளில் சென்று கொண்டிருப்பதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத் தொடர் 16ம் தேதி தொடங்கியது. நாடாளுமன்றத்தில் ரூபாய் நோட்டு செல்லாது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ரூபாய் நோட்டு செல்லாது நடவடிக்கையில் மத்திய அரசு சரியான பாதையில் பயணித்து கொண்டிருக்கிறது என்று உறுதிபட தெரிவித்துள்ளார். 

மேலும் 2ஜி நிலக்கரி ஊழல் எல்லாம் தவறாக தெரியவில்லையா என எதிர்க்கட்சிகளுக்கு நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கேள்வி எழுப்பியுள்ளார். 

ரூபாய் நோட்டு வாபஸ் குறித்து பத்திரிகையாளர்களிடம் ஜெட்லி கூறியதாவது: 

கறுப்பு பணம், ஊழலுக்கு எதிரான அரசின் நடவடிக்கை சரியானது தான் என நிருபிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மாநிலங்களவையில் பங்கேற்ற பின்னரும் விவாதத்தில் கலந்து கொள்ள எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை. எதிர்க்கட்சியினர் சரியாக எதையும் பேசுவதில்லை. எதிர்க்கட்சியினரிடம் எந்த திட்டமும் இல்லை. 

மேலும், ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதாகவும் ஜெட்லி குற்றம் சாட்டினார்.

மன்மோகன் கூறுவதை போல் ஜிடிபி குறையும் என்பதை ஏற்க முடியாது. ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தில் ஊழல் எனக்கூறும் எதிர்க்கட்சிகளுக்கு 2ஜி ஊழல் தவறாக தெரியவில்லையா? காங்கிரஸ் ஆட்சியில் தான் 2ஜி, நிலக்கரி மற்றும் காமன்வெல்த் ஊழல் நடந்தது. கடந்த காலத்தில் நடந்த ஊழல்களால் தான் கறுப்பு பணம் அதிகரித்துள்ளது என்றார்.

Trending News