தைரியமான சீர்திருத்தங்கள் தேவை- அருண் ஜெட்லி

பொருளாதாரத்தை மாற்றியமைக்க இந்தியா தைரியமான முடிவுகளை எடுக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

Last Updated : Jan 11, 2017, 12:20 PM IST
தைரியமான சீர்திருத்தங்கள் தேவை- அருண் ஜெட்லி title=

புதுடெல்லி: பொருளாதாரத்தை மாற்றியமைக்க இந்தியா தைரியமான முடிவுகளை எடுக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

8-வது பதிப்பான 'வைப்ரன்ட் குஜராத்' எனப்படும், நான்கு நாட்கள் முதலீட்டாளர்கள் மாநாடு, குஜராத்தின் காந்தி நகரில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கலந்து கொண்டார்.

அபோது அருண் ஜெட்லி பேசியதாவது:-

அரசு நிர்வாகத்தில் வெளிப்படை தன்மை கொண்டு வருவதில் தீவிரமாக உள்ளோம். மறைமுக பொருளாதாரம் வளர்வதை அனுமதிக்க முடியாது. பொருளாதாரத்தை மாற்றியமைக்க தைரியமான முடிவுகள் தேவை. கடினமான கட்டங்களை, கடினமான முடிவுகள் மூலம் கடந்து விட்டோம். இதற்கான தைரியமான முடிவுகள் தேவைப்படுகிறது. 

ஜி.எஸ்.டி., மசோதா நிறைவேறிய பின்னர், நாடு முழுவதும் சரக்குகளை எளிதில் கையாள முடியும். இந்த மசோதாவில் கடந்த 2 வருடங்களில், வேறுபாடுகள் மாற்றப்பட்டன. ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்ற தேவையான அளவு முயற்சி செய்யப்பட்டது. ஜிஎஸ்டி தொடர்பான பிரச்னைகள் தீர்க்கப்பட்டுள்ளது. சில முக்கிய பிரச்னைகள் மட்டுமே உள்ளது

இவ்வாறு அவர் கூறினார்.

Trending News