புதுடெல்லி: அடுத்த ஆண்டு செப்டம்பர் 2017-க்கு அப்பால் ஜிஎஸ்டி தாமதமாக முடியாது என்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் ஜி.எஸ்.டி., விதிப்புமுறை அமலாகாவிட்டால் வரி விதிப்பு முறையில் சிக்கல் ஏற்படும் எனறு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறுயுள்ளார்.
நாடு முழுவதும், ஒரே சீரான வரி விதிப்பு முறையான, ஜி.எஸ்.டி.,யை, அடுத்த ஆண்டு, ஏப்ரல், 1-ம் தேதி முதல் அமல்படுத்துவதில், மத்திய அரசு தீவிரமாக உள்ளது.
நிதி அமைச்சர் கூறுகையில் பரந்த வரி அடிப்படையில் எளிய மற்றும் நியாயமான வரி விகிதம் செய்யப்படும் வேண்டும் என்று கூறினார்.
ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறை, அடுத்த ஆண்டு, செப்டம்பர் 16-ம் தேதிக்குள் அமலாகவில்லை என்றால், எந்த வரி விதிப்பு முறையும் நடைமுறையில் இருக்காது. இருப்பினும், ஏற்கனவே திட்டமிட்டபடி, அடுத்த ஆண்டு, ஏப்ரல், 1-ம் தேதியில் இருந்து, ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறையை அமல்படுத்து வதில், மத்திய அரசு தீவிரமாக உள்ளது. மேலும் ஜி.எஸ்.டி. அமலுக்கு வரவில்லை என்றால் பின்னர் நாட்டில் வரிவிதிப்பு இருக்காது.