ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டு துறையில் சாதனை செய்தவர்களுக்கு மத்திய அரசு கேல் ரத்னா விருது வழங்கி கெளரவித்து வருவது வழக்கம்.
அதனடிப்படையில், இந்த ஆண்டுக்கான கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்படும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலிக்கு கேல்ரத்னா விருது, பரிந்துரை செய்திருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
அதேபோன்று, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கருக்கு வாழ்நாள் சாதனை விருதும், பரிந்துரை செய்திருகிறதம்.
ஏற்கனவே இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் தவானை அர்ஜூனா விருதுக்கு பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் வீராங்கனை ஸ்மிரிதி மந்தனாவின் பெயரும் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
The Board for Cricket Control in India (#BCCI) has recommended Indian skipper #ViratKohli 's name for country's highest sporting honour Rajiv Gandhi Khel Ratna award.
Read @ANI Story | https://t.co/XBZn5ffVmM pic.twitter.com/RZG28AqGfc
— ANI Digital (@ani_digital) April 26, 2018
அதன்படி, கேல்ரத்னா மற்றும் அர்ஜூனா விருது பெற்றவர்களின் பட்டியல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!