YouTube Shorts கொண்டுவரப்போகும் புதிய அப்டேட் - இன்னும் ஜாலிதான்

மொபைல் யூசர்கள் மட்டுமே யூ டியூப் ஷார்ட்ஸ் பயன்படுத்தி வந்த நிலையில், டேப்லெட் மற்றும் டெஸ்க்டாப் யூசர்களுக்காகவும் விரைவில் களமிறக்கப்பட உள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 17, 2022, 03:36 PM IST
  • யூ டியூப் ஷார்ட்ஸ் புதிய அப்டேட் விரைவில்
  • டெஸ்க்டாப் யூசர்கள் பயன்படுத்தலாம்
YouTube Shorts கொண்டுவரப்போகும் புதிய அப்டேட் - இன்னும் ஜாலிதான் title=

யூடியூப் நிறுவனத்தின் குறுகிய வீடியோ வடிவமான யூடியூப் ஷார்ட்ஸ் விரைவில் டெஸ்க்டாப் மற்றும் டேப்லெட்டுகளுக்கும் கொண்டுவரப்பட இருக்கிறது. இதனை தற்போது மொபைல் ஃபோன்களில் மட்டுமே அணுக முடியும். டெஸ்க்டாப்கள், டேப்லெட்டுகள் மற்றும் ஸ்மார்ட் டிவிகள் போன்ற இயங்குதளங்களில் ஷார்ட்ஸ் வீடியோக்களை பயனர்களால் பயன்படுத்த முடியாது. இப்போது, ​​கூகிள் டெஸ்க்டாப்புகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கு ஏற்ப அப்டேட்டை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | ஜியோ vs ஏர்டெல் vs Vi:ரூ. 300-க்குள் இருக்கும் பெஸ்ட் ப்ரீப்பெய்ட் பிளான்கள்

அடுத்த சில வாரங்களில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டேப்லெட் மற்றும் டெஸ்க்டாப் யூசர்களுக்கு இது ஒரு நல்ல செய்தியாகும். ஏனெனில் பலர் ஸ்மார்ட்போன்களுக்குப் பதிலாக பெரிய திரைகளில் ஷார்ட்ஸை பார்க்க விரும்புகின்றனர். டெஸ்க்டாப்புகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான யூடியூப் இன்டர்பேஸில் எவ்வாறு ஒழுங்கமைக்கப்படும் என்பதைப் பார்க்க வேண்டும். இது ஸ்மார்ட்போன்களில் இருந்து வேறுபட்டது. மொபைலில் யூடியூப் ஷார்ட்ஸ், அதற்கென்று தனிப்பட்ட பகுதியைக் கொண்டுள்ளது. 

அதேபோல் டெஸ்க்டாப் யூசர்களுக்கும் கொண்டுவரப்பட்டு விரைவில் பிரத்யேக ஷார்ட்ஸ் பகுதியைப் பார்ப்பார்கள். எல்லா ஷார்ட்ஸ் கிளிப்களும் ஒரே இடத்தில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட இருக்கிறது.  மேலும், யூடியூப் தனது ஷார்ட்ஸ் இயங்குதளத்தில் ‘கட்’ என்ற புதிய அம்சத்தையும் கொண்டு வருகிறது. இதன்மூலம் உங்கள் சொந்த கிளிப்பில் பிற பயனர்களின் வீடியோக்களின் பகுதிகளைச் சேர்க்க முடியும். டிக்டோக்கில் உள்ள ‘ஸ்டிட்ச்’ அம்சத்தைப் போலவே கட் வேலை செய்யும். அதேநேரத்தில், தங்கள் கிளிப்களை மற்றவர்களின் வீடியோக்களில் பயன்படுத்துவதை விரும்பாத யூசர்கள், இந்த அம்சத்திலிருந்து விலகலாம். அதற்கான செட்டிங்ஸூம் கொடுக்கப்படும். 

மேலும் படிக்க |  Ertiga Vs Carens Vs Triber:சிறந்த மைலேஜ் மற்றும் விலையில் பெஸ்ட் கார் எது?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News