இன்று உலகம் முழுவதும் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்துகின்றனர். வாட்ஸ்அப் செயலி வந்தபிறகு, பல வேலைகள் மிகவும் எளிதாகிவிட்டன. இன்று வணிகம், கல்வி என பல முக்கிய விஷயங்களுக்கு வாட்ஸ்அப் பெரிய அளவில் பயன்படுத்தப்படுகிறது. அதேசமயம் நீங்கள் WhatsApp பற்றி சில விஷயங்களை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், ஒரு பெரிய இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும்.
கடந்த சில ஆண்டுகளில், ஸ்பேம் மற்றும் ஃபிஷிங் இணைப்புகள் மூலம் வாட்ஸ்அப்பில் மோசடி செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒவ்வொரு நகர்விலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் சிறிய கவனக்குறைவு பெரிய இழப்பை ஏற்படுத்தும்.
மேலும் படிக்க | வருஷம் முழுவதும் ஆஃபர்களை அள்ளி கொடுக்கும் ஏர்டெல்! இந்த பிளானை ரீச்சார்ஜ் செய்யுங்க
பல ஹேக்கர்கள் விழா காலங்களில் சலுகைகள் தொடர்பாக லிங்குகளை வாட்ஸ்அப் மூலம் நண்பர்கள், தொடர்பில் இருக்கும் குழுவினருக்கு அனுப்புகிறார்கள். அந்த லிங்குகளில் விலையுயர்ந்த பரிசுகள் இருப்பதாக கூறப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், மக்கள் பேராசை கொண்டு இந்த இணைப்புகளை கிளிக் செய்கிறார்கள். இங்கு தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், லிங்குகளைக் கிளிக் செய்த பிறகு, அவர்களின் ஸ்மார்ட்போனில் வேறு இணையதளம் திறக்கப்படும். இங்கு அவர்களின் வங்கியின் தேவையான விவரங்கள் கேட்கப்படுகின்றன.
பேராசையில், மக்கள் இந்த முக்கியமான விவரங்களை நிரப்புகிறார்கள். பின்னர் ஹேக்கர்கள் கைவரிசையை காட்டிவிடுகின்றனர். இதேபோல் பல WhatsApp பயனர்களை குறிவைத்து ஹேக்கர்கள் மோசடிகளை அரங்கேற்றி வருகின்றனர். கடந்த ஆண்டுகளில், இதுபோன்ற மோசடிகளால் வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்கள் பல லட்சம் ரூபாய் இழந்துள்ளனர். சில வகையான ஸ்பேம் அல்லது ஃபிஷிங் இணைப்புகள் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்தால், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் சிறிய கவனக்குறைவு பெரிய இழப்பை ஏற்படுத்தும்.
மேலும் படிக்க | 40 ஆயிரம் ரூபாய் கூகுள் மொபைல் வெறும் ரூ.13 ஆயிரத்துக்கு விற்பனை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ