Flipkart Big Billion Days சலுகை மழை: ரூ.34,000 தள்ளுபடியில் லேப்டாப், இன்னும் பல offers

அக்டோபர் 10 வரை நடைபெறும் இந்த ஃப்ளிப்கார்ட் விற்பனையில், மின்னணு பொருட்கள் உட்பட அனைத்து வகையான பொருட்களுக்கும் உங்களுக்கு பெரிய தள்ளுபடிகளுடன் வழங்கப்படுகின்றன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 4, 2021, 11:13 AM IST
  • மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த சமயம் வந்துவிட்டது.
  • அக்டோபர் 3 முதல், நாட்டின் முன்னணி இ-காமர்ஸ் வலைத்தளமான ஃப்ளிப்கார்ட் அதன் பிக் பில்லியன் டேஸ் விற்பனையை தொடக்கியது.
  • M1 சிப்பில் இயங்கும் Apple MacBook Air-ஐ 92,900 ரூபாய்க்கு பதிலாக 80 ஆயிரம் ரூபாய்க்கு வாங்க ஒரு அரிய வாய்ப்பு இந்த சேலில் கிடைக்கும்.
Flipkart Big Billion Days சலுகை மழை: ரூ.34,000 தள்ளுபடியில் லேப்டாப், இன்னும் பல offers  title=

Flipkart Big Billion Days Sale: மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த சமயம் வந்துவிட்டது. அக்டோபர் 3 முதல், நாட்டின் முன்னணி இ-காமர்ஸ் வலைத்தளமான ஃப்ளிப்கார்ட் அதன் பிக் பில்லியன் டேஸ் விற்பனையை தொடக்கியது.

அக்டோபர் 10 வரை நடைபெறும் இந்த ஃப்ளிப்கார்ட் (Flipkart) விற்பனையில், மின்னணு பொருட்கள் உட்பட அனைத்து வகையான பொருட்களுக்கும் உங்களுக்கு பெரிய தள்ளுபடிகளுடன் வழங்கப்படுகின்றன. ஸ்மார்ட்போன்கள் முதல் சமையலறை உபகரணங்கள் வரை, அனைத்திலும் வாடிக்கையாளர்கள் அற்புதமான ஒப்பந்தங்களைப் பெறலாம். இந்த சேலில் என்னென்ன சலுகைகள் கிடைக்கின்றன என்பதை இந்த பதிவில் காணலாம்.

Asus லேட்டஸ்ட் லேப்டாப்
Asus VivoBook K15 OLED லேப்டாப் (Laptop), சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் ரூ. 34 ஆயிரம் தள்ளுபடி கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ .1,00,990 ஆகும். ஆனால், தள்ளுபடிக்கு பிறகு, இந்த லேப்டாப்பை ரூ. 66,990-க்கு வாங்கலாம். 15.6 இன்ச் முழு எச்டி+ ஓஎல்இடி டிஸ்ப்ளே கொண்ட இந்த லேப்டாப்பில் 15,650 ரூபாய் வரை கூடுதலாக சேமிக்க முடியும். உங்கள் பழைய லேப்டாப்பை அளித்து பரிமாற்ற சலுகையை நீங்கள் பயன்படுத்திக்கொண்டால், உங்களுக்கு இந்த சலுகை கிடைக்கும். அதன் எக்ஸ்சேஞ்ச் சலுகையைப் பயன்படுத்திக் கொண்டால் இந்த தொகையை  சேமிக்க முடியும். பல வங்கி சலுகைகளும் இதில் உங்களுக்கு வழங்கப்படுகிறது.

கூகுள் பிக்சல் தொடரின் இந்த ஸ்மார்ட்போனிலும் தள்ளுபடி உள்ளது

நீங்கள் Google Pixel 4a ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டிருந்தால், பிளிப்கார்ட்டின் இந்த விற்பனையில் ரூ .31,999 க்கு பதிலாக ரூ .25,999 க்கு வாங்கலாம். நீங்கள் ஐசிஐசிஐ அல்லது ஆக்ஸிஸ் வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டு கொண்டு பணம் செலுத்தினால், கூடுதலாக 10% உடனடி தள்ளுபடியைப் பெறலாம். தற்போதுள்ள எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் நீங்கள் ரூ .15,800 வரை சேமிக்கலாம்.

ALSO READ: Amazon Great Indian Festival Sale 2021: iPhone 12 Pro இல் பிரம்மாண்ட தள்ளுபடி 

Apple MacBook Air-ல் தள்ளுபடி

M1 சிப்பில் இயங்கும் Apple MacBook Air-ஐ 92,900 ரூபாய்க்கு பதிலாக 80 ஆயிரம் ரூபாய்க்கு வாங்க ஒரு அரிய வாய்ப்பு இந்த சேலில் கிடைக்கும். நீங்கள் ஆக்சிஸ் வங்கி அல்லது ஐசிஐசிஐ வங்கி கார்டைப் பயன்படுத்தினால், இதை ரூ .72 ஆயிரத்திற்கும் வாங்கலாம். பரிமாற்ற சலுகையின் கீழ் இதை வாங்கினால், இதில் ரூ .15,650 வரை தள்ளுபடி பெறலாம்.

மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களிலும் நல்ல சலுகைகள் கிடைக்கின்றன

இந்த விற்பனையில் Motorola Edge 20 Fusion-ஐ  நீங்கள் ரூ .19,999 க்கு வாங்கலாம். அதன் அசல் விலை ரூ .24,999 ஆகும். ஆக்சிஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கி கார்ட்களைப் பயன்படுத்தி 108 எம்பி கேமராவுடன் இந்த ஸ்மார்ட்போனில் 10% உடனடி தள்ளுபடியையும் நீங்கள் பெறலாம்.

இயர்பட்களை மலிவாக வாங்கலாம்

Nothing Ear 1 TWS இயர்பாட்களை இந்த சேலில் ரூ .5,499 க்கு வாங்கலாம். இந்த இயர்பாட்களை வாங்கும்போது, ​​ஆக்சிஸ் வங்கி அல்லது ஐசிஐசிஐ வங்கி கார்டுகளைப் பயன்படுத்தினால் 10% உடனடி தள்ளுபடி கிடைக்கும். இந்த இயர்போன்களின் உண்மையான விலை ரூ .7,499 என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற ஏராளமான சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ள, வாடிக்கையாளர்கள் உடனடியாக Flipkart இன் வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டும். அல்லது இதன் மொபைல் செயலியை உங்கள் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பல வித டீல்களுடன், பல வங்கி சலுகைகள், கேஷ்பேக் வாய்ப்புகள் மற்றும் இன்னும் பல சலுகைகளை இந்த விற்பனையில் பெறுவீர்கள்.

மேலும், பல பிராண்டுகள் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துகின்றன. அவை அறிமுகம் ஆகும் வேளையில் அவற்றை குறைந்த விலையில் வாங்க வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

ALSO READ: Flipkart வழங்கும் அதிரடி சலுகை: Motorola போன்களில் ரூ. 6000 வரை தள்ளுபடி 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News