அவசியம் என்பதைவிட அத்தியாவசியமாகிவிட்ட வாட்ஸ் அப் செயலி, 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டபோது இப்போது இருக்கும் அம்சங்கள் பல இல்லை. இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ் அப் மூலம் நீங்கள் பணம் அனுப்பலாம், வீடியோ மற்றும் ஆடியோ மூலம் சாட் செய்யலாம், வணிகம் மேற்கொள்ளலாம். இவையெல்லாம் லேட்டஸ்ட் அப்டேட்.
புதிய டெக்னிக்கை அறிமுகப்படுத்துவதிலும், போட்டியாளர்களுக்கு சவால் கொடுப்பதிலும் வாட்ஸ் அப் திறமையாக செயல்பட்டு வருகிறது. இதில் இருக்கும் ஒரு சிறபம்சம் பலருக்கும் தெரியவில்லை. அதுஎன்னவென்றால், ஒரே ஸ்மார்ட்போனில் இருக்கும் இரண்டு சிம்களிலும் வாட்ஸ் அப்-ஐ தனித்தனியாக பயன்படுத்தலாம்.
ALSO READ | பழைய சோஷியல் மீடியா அக்கவுண்டை டெலிட் செய்ய வேண்டுமா? இதோ டிப்ஸ்
1. ஆண்ட்ராய்டு போன்களில் பல கணக்குகளை உருவாக்குவதற்கு ஒரு APP-ஐ குளோன் செய்ய அல்லது நகலெடுக்க அனுமதிக்கும் செட்டிங்ஸ்கள் உள்ளன. Oppo ஃபோன்களில் குளோன் ஆப்ஸ், Asus-ல் ட்வின் ஆப்ஸ், சாம்சங்கில் டூயல் மெசஞ்சர் மற்றும் சியோமியில் டூயல் ஆப்ஸ் ஆகியவை இருக்கும்.
2. பெரும்பாலான ஆண்ட்ராய்டுகளுக்கான செயல்முறைகள் ஒரே மாதிரியாக இருப்பதால், முதலில் உங்கள் மொபைலின் அமைப்புகளுக்கு செல்லுங்கள்
3. இப்போது, உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனின் பிராண்டைப் பொறுத்து, குளோன் ஆப்ஸ் அல்லது டூயல் ஆப் அமைப்புகளைத் தேடவும்.
4. நீங்கள் அமைப்புகளைக் கண்டறிந்த பிறகு அந்த அம்சத்தைத் திறந்து, விருப்ப பட்டியலில் WhatsApp-ஐ தேடுங்கள். Facebook மற்றும் Instagram போன்ற பிற விருப்பங்கள் பெரும்பாலான தொலைபேசிகளில் கிடைக்கின்றன.
5. வாட்ஸ்அப்பைத் தேர்ந்தெடுத்து குளோனிங் அம்சத்தை இயக்கவும். இரண்டு பதிப்புகளும் தனித்து நிற்க புதிய பதிப்பிற்கு வேறு பெயரை கொடுக்கலாம்.
6. இப்போது முகப்புத் திரும்பினால், அங்கு நீங்கள் இரண்டு WhatApp ஐகான்களைக் காண்பீர்கள்.
7. நீங்கள் இப்போது செய்ய வேண்டியது இரண்டு வாட்ஸ்அப்பிலும் தனித்தனி மொபைல் எண்களை கொடுத்து பயன்படுத்தலாம்
ALSO READ | Motorola புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, பிற விவரம் இதோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR