புதுடெல்லி: புதிய இரு சக்கர வாகனம் பற்றி அதிகம் வெளியிடாத டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது புதிய பைக் தொடர்பான டீசரை வெளியிட்டுள்ளது. அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படும் டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய வாகனத்திற்கான எதிர்பார்ப்பு சந்தையில் அதிகரித்துள்ளது.
டிவிஎஸ் செப்பெலின் (1)
டிவிஎஸ் வாகன உற்பத்தி நிறுவனம் 6 ஜூலை 2022 அன்று புதிய மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்வதாக உறுதி செய்துள்ளது. நிறுவனம் தனது லோகோ மற்றும் #NEWWAYOFLIFE என்ற ஹேஷ்டேக்குடன் டீசரை வெளியிட்டது. இருப்பினும், நிறுவனம் அதன் வரவிருக்கும் டிவிஎஸ் பைக்கின் அதிகாரப்பூர்வ பெயர் மற்றும் விவரங்களை இதுவரை வெளியிடவில்லை.
அறிக்கைகளின்படி, இது TVS Zeppelin அல்லது Apache RR 310 இன் பதிப்பாக இருக்கலாம். இந்த இரண்டு பைக்குகளிலும் பல புதிய மற்றும் தொழில்நுட்ப சிறப்பம்சங்கள் இருக்கும் என்று நம்பப்படுகிறது.
மேலும் படிக்க | Used Cars: ரூ. 19,000-ல் கூட கார் வாங்கலாம், மாருதி சுசுகி அளிக்கும் அசத்தல் ஆஃபர்
டிவிஎஸ் செப்பெலின் பைக்குகள்
பிரபல இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனம், அதன் வரவிருக்கும் பைக்கிற்கு 'Zeppelin R' என்ற பதிந்து வைத்துள்ளது. 2020 ஆம் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த பைக் ஒரு கான்செப்டாக காட்சிப்படுத்தப்பட்டது.
கான்செப்ட் மாடல் 220சிசி, சிங்கிள்-சிலிண்டர் எஞ்சின் மூலம் இயக்கப்பட்டது, 48-வோல்ட் லித்தியம்-அயன் பேட்டரியுடன் இணைந்து 1,200-வாட் ரீஜெனரேட்டிவ் அசிஸ்ட் மோட்டாருடன் இணைக்கப்பட்டது. இந்த எஞ்சின் 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது, இது 20bhp பவரையும், 18.5Nm பீக் டார்க்கையும் உருவாக்குகிறது.
TVS Zeppelin இன் சிறப்பம்சங்கள்
தேவைப்படும் போது செப்பெலின் இன்ஜின் 20 சதவீதம் கூடுதல் டார்க்கை தருவதாக டிவிஎஸ் கூறுகிறது. இந்த கான்செப்ட் மாடலில் ஸ்மார்ட் பயோ-கீ, எச்டி ஆக்ஷன் கேமரா மற்றும் ஆன்லைன் இணைப்பு போன்ற அம்சங்கள் பொருத்தப்பட்டிருந்தது. இருப்பினும், அதன் இறுதி தயாரிப்பில் இதன் அம்சங்கள் மாறுபட்டதாக இருந்தாலும் ஆச்சரியப்பட முடியாது.
மேலும் படிக்க | Lightyear 0: உலகின் முதல் சோலார் கார் லைட்இயர் 0
TVS அப்பாச்சி RTR 310 பைக்
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 அடிப்படையிலான புதிய ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக்கை உருவாக்கி வருகிறது. வெளியாகியிருக்கும் செய்திகளின்படி, இந்த மாடலுக்கு TVS Apache RTR 310 என்று பெயரிடலாம். இது பொதுவான அம்சங்களுடன் RTR 200 4V ஐ விட அதிக தசை வடிவமைப்பைப் பெறலாம்.
இது தவிர, எல்இடி ஹெட்லேம்ப்கள், தட்டையான மற்றும் அகலமான ஹேண்டில்பார்கள், புளூடூத் இணைப்பு, சரிசெய்யக்கூடிய சஸ்பென்ஷன், இழுவைக் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் பல ரைடிங் முறைகள் போன்ற அம்சங்களும் பைக்கில் கிடைக்கும்.
TVS Apache RTR 310 இன் எஞ்சின்
பைக்கில் 312.2, சிங்கிள்-சிலிண்டர், லிக்விட்-கூல்டு எஞ்சின் மூலம் இயக்கப்படும். இது 34 பிஎச்பி பவரையும், 27.3 என்எம் பீக் டார்க்கையும் உருவாக்குகிறது. இது இரட்டை சேனல் ஏபிஎஸ் (ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்) தரமாக இருக்கும்.
இந்த இரண்டு பைக்குகள் தவிர, நிறுவனம் BMW G310 R அல்லது G310 GS இன் வேறு பதிப்பைக் கொண்டு வரலாம். இது, 310 cc வரம்பில் BMW மற்றும் TVS இணைந்து உருவாக்கியுள்ளது.
மேலும் படிக்க | ரூ. 6 லட்சத்துக்கும் குறைவான விலையில் கிடைக்கும் அசத்தலான 7 சீட்டர் கார்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR