இரவு 7 மணிக்குள் டின்னர் சாப்பிடுவதால் ஏற்படும் 7 நன்மைகள்!!

Benefits Of Having Dinner Before 7 : நம்மில் பலர், இரவு டின்னர் சீக்கிரமாக சாப்பிட வேண்டும் என்று நினைப்போம். இதனால் ஏற்படும் பலன்கள் என்னென்ன தெரியுமா?

Benefits Of Having Dinner Before 7 : இரவு உணவு என்பது, நம் உடல் எடையை குறைக்க உடலை சரியாக பராமறித்துக்கொள்ள எடுத்துக்கொள்ளும் உணவுகளில் முக்கியமான உணவுகளுள் ஒன்றாகும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள் கண்டிப்பாக சீக்கிரமாக டின்னர் சாப்பிட வேண்டியது நல்லது. இதனால் ஏற்படும் பலன்கள் என்னென்ன தெரியுமா?

1 /7

7 மணிக்குள் இரவு உணவை சாப்பிட்டு முடிப்பதால், நாம் சாப்பிடுவது சீக்கிரமாக செரிமானம் ஆகுமாம். இதனால் வயிறு உப்பசம் ஆவது தவிர்க்கப்படும். மேலும், புரதச்சத்துகளை உறிஞ்சுக்கொள்ளும் சக்தியும் கிடைக்கும்.

2 /7

இரவில் சீக்கிரமாக சாப்பிடுவது, நல்ல உறக்கத்திற்கும் வழி வகுக்கும். மேலும், அவ்வப்போது விழித்துக்கொண்டும் முழித்துக்கொண்டும் வரும் அறைகுறை தூக்கமும் வராமல் இருக்கும்.

3 /7

உடலில் இருக்கும் ஹார்மோன்களை பாலன்ஸ் செய்ய, இரவு உணவை சீக்கிரமாக சாப்பிடலாம். இது, மெட்டபாலிசத்தை அதிகரித்து பசிக்கும் ஹார்மோன்களை கட்டுப்படுத்துகிறது.

4 /7

வயதானவர்கள், உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள் இரவில் சீக்கிரமாக உணவு சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் இதனை பின்பற்ற வேண்டும். இது இன்சுலின் அளவு அதிகரிப்பதை தடுக்கும்.

5 /7

இரவில் ஹெவியாக சாப்பிடுவது நம் மன நலனையும் பாதிக்கலாம். இதை தவிர்க்க குறைந்த அளவிளான உணவை 7 மணிக்கு முன்பாக சாப்பிட வேண்டும்.

6 /7

உடல் ஆற்றலை அதிகரிக்க, நாள் முழுவதும் ஆக்டிவாக இருக்க இரவு 7மணிக்குள் டின்னர் சாப்பிட்டு விட வேண்டும். 

7 /7

இதய நோய், சுவாச கோளாறுகள் உள்ளிட்டவற்றை தவிர்க்க, இரவில் உணவை சீக்கிரம் சாப்பிடலாம். மேலும், இந்த பழக்கம் உடல் எடை ஏறாமலும் தடுக்குமாம்.