சரியான திசையில் கடிகாரம் வைக்காவிட்டால் சில மனக்கசப்புகள் உருவாக அதிகம் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் நீங்கள் கடிகாரம் வைக்கும் திசைகள் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
நமது வீட்டில் சரியான திசையிலும் மற்றும் சரியான இடத்திலும் கடிகாரம் வைப்பதால் பலவித நன்மைகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது. சரியான திசையில் வைக்கப்படும் கடிகாரத்தால் உங்கள் வீட்டில் செழிப்பு மற்றும் மன நிம்மதி உருவாகும் என்று கூறப்படுகிறது.
வீட்டில் ஒருபோதும் உடைந்த கடிகாரத்தைப் பயன்படுத்தாதீர்கள். இது வாஸ்து சாஸ்திரத்தில் வீட்டைக்கெடுக்கும் எனச் சொல்லப்படுகிறது.
வீட்டில் கடிகாரம் வேலை செய்யாமல் இருந்தால் அதற்கு உரிய பேட்டரி வாங்கி பயன்படுத்தி சுவரில் வைக்கவும். இது உங்கள் அன்றாட நேரத்தை மாற்றலாம்.
வீட்டில் கடிகாரத்தை வாசலுக்கு நேராக வைக்கக்கூடாது.இது பணப் பிரச்சனையை உண்டாக்கும் என்று சொல்லப்படுகிறது.
கதவு அல்லது நிற்க வைத்ததுபோல் கடிகாரம் வீட்டில் வைக்காதீர்கள். இது வீட்டில் கவலையை உண்டாகும் என சொல்லப்படுகிறது.
மேற்கு அல்லது தெற்கு திசையில் கடிகாரம் வைக்காதீர்கள். இது உங்கள் குடும்பத்தில் நிதி பிரச்சனை அதிகம் ஏற்படுத்துமாம். அந்தவகையில் குடும்ப உறவுகளிடையே மனக்கசப்பு உண்டாகும் என்று சொல்லப்படுகிறது.
கிழக்கு நோக்கி கடிகாரம் மாட்டுங்கள். இது உங்கள் வீட்டில் மன அமைதியை உண்டாக்கும். மேலும் வளமான செழிப்பை குடும்பத்தில் அளிக்கும் என்று கூறப்படுகிறது.
வாஸ்து சாஸ்திரத்தில் வீட்டில் சரியான இடத்தில் கடிகாரம் வைக்க வேண்டுமாம். இது உங்கள் வீட்டில் நன்மை மற்றும் தீமை உண்டாக்கும் சக்தி நிறைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
பல வாஸ்து நிபுணர்கள் இந்த கடிகாரம் மாட்டும் திசை மற்றும் இதன் தகவல் பற்றிக் கூறுகையில் இதற்கு வாஸ்து சக்தி இருப்பதாகவும், அதுமட்டுமல்லாமல் உங்கள் குடும்பத்தின் நிதி, மன அழுத்தம் மற்றும் மகிழ்ச்சியைத் தீர்மானிக்கும் எனவும் சொல்லப்படுகிறது.