Hrithik Roshan Fitness And Diet Tips : இந்தி நடிகராக இருந்தாலும் தமிழகத்தில் இருக்கும் பல பெண்களின் மனதில் ஹாண்ட்சம் ஹீரோவாக இடம் பிடித்தவர், ரித்திக் ரோஷன். இளமைக் காலத்தில் மட்டுமல்ல, 51 வயது ஆன பொழுதும் கூட, கொஞ்சம் கூட தனது உடல் நலனை விட்டுக் கொடுக்காமல் இன்னும் கட்டுக்கோப்பாக இருந்து அடுக்கடுக்கான சிக்ஸ் பேக்குகளை வைத்து, அசத்தி வருகிறார். இவரை தன் உடலை பத்திரமாக பார்த்துக்கொள்ள, உடல் எடை ஏறாமல் இருக்க அவர் சில உடற்பயிற்சிகளையும் உணவுகளையும் பின்பற்றுகிறார். இது குறித்து முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
ரித்திக் ரோஷனின் தினசரி பழக்கம்:
சமீபத்தில் ரித்திக் ரோஷன் ஜிம்மில் இருப்பது போன்ற ஒரு வீடியோ வெளியானது. இதில் அவர் உடலை ஃபிட்டாக வைத்திருப்பது குறித்து பேசுகிறார். இந்த வீடியோவில் அவர் புஷ் அப் செய்வது, புல் அப் செய்வது, டம்புள்ஸ் வைத்து உடற்பயிற்சி செய்வது போன்ற காட்சிகள் காண்பிக்கப்பட்டுள்ளது.
சரியான இலக்குகள்:
உடலை ஃபிட்டாக வைத்து இருக்க யார் நினைத்தாலும், முதலில் அதற்கான சரியான இலக்குகளை தேர்ந்தெடுக்க வேண்டும். அது உடல் எடை இழப்பா, தசைகளை வளர்ப்பதா, ஸ்டாமினாவை அதிகரிப்பதா உள்ளிட்ட இலக்குகளை சரியாக தேர்ந்தெடுத்தல் வேண்டும். இதுவே உங்களுக்கு மோட்டிவேஷனை கொடுக்கும் விஷயமாக இருக்கும்.
விடாமுயற்சி:
எந்த இலக்கை நோக்கி ஓடினாலும் அதில் விடாமுயற்சி இருக்க வேண்டியது அவசியம். சுய ஒழுக்கத்தோடு தினசரி வொர்க் அவுட் செய்வது, டயட்டில் இருப்பது முக்கியம். சின்ன சின்ன தவறுகள் செய்தாலும் அல்லது தோல்விகள் கிடைத்தாலும் இலக்கில் இருந்து பின்வாங்க கூடாது.
நீர்ச்சத்து:
உடல் எடையை பேலன்ஸ் செய்ய வேண்டும் அல்லது குறைக்க வேண்டும் என்றால் உடலில் நீர்ச்சத்து இருப்பது அவசியம். இதனால் தினமும் உடற்பயிற்சி செய்யும் போது அதற்கிடையே தண்ணீர் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும். இதுதான் தசைகள் வளரவும் உதவும்.
சரியான தூக்கம்:
உடலை பத்திரமாக பார்த்துக் கொள்ள உடற்பயிற்சி செய்தால் மட்டும் போதாது. கூடவே சரியான நேரத்திற்கு தூங்கி எழுவதும் அவசியம். தினமும் உடலுக்கு நன்கு ஓய்வு தரும் வகையில் 7-8 மணி நேரங்கள் தூங்க வேண்டியதும் அவசியம். இதை சரியாக கடைபிடிக்கும் ரித்திக் ரோஷன் தினமும் உறங்க செல்வதற்கு முன், யோகா அல்லது stretching செய்வாராம்.
சாப்பிடும் உணவு:
ரித்திக் ரோஷன் உடலை ஃபிட் ஆக வைத்துக்கொள்ள சரியான டயட் டைம் பின்பற்றுகிறார். இது குறித்து மேற்கூறிய வீடியோவில் பேசியிருக்கும் அவர், தினமும் எழுந்தவுடன் ஆறு முட்டையின் 6 வெள்ளை கருவை மட்டும் சாப்பிடுவாராம். அத்துடன் சேர்த்து அவகேடோவும் சாப்பிடுகிறார். ஒரு நாளைக்கு நான்கு வேலை சாப்பிடுவதாக கூறும் இவர், 70 கிராம் புரதச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதாகவும், சாலட் மற்றும் காய்கறிகளை உட்கொள்வதாகவும் கூறுகிறார். தான் இருக்கும் எடை பொறுத்து இது மாறும் என்றும் கூறுகிறார்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க நயன்தாரா ‘இதை’ குடிப்பாராம்! என்ன தெரியுமா?
மேலும் படிக்க | 4 மாதங்களில் வெயிட் லாஸ் செய்ய வரலட்சுமி செய்த 4 விஷயங்கள்! ரொம்ப சிம்பிள்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ