இன்று முதல் SBI ATM சென்றால் தொலைபேசியும் அவசியம்

இன்று (1 ஜனவரி 2020) முதல் அனைத்து எஸ்பிஐ ஏடிஎம்களிலும் ஓடிபி மூலம் பணத்தை எடுக்கும் முறை அமலுக்கு வந்துள்ளது.

Last Updated : Jan 1, 2020, 02:42 PM IST
இன்று முதல் SBI ATM சென்றால் தொலைபேசியும் அவசியம் title=

இன்று (1 ஜனவரி 2020) முதல் அனைத்து எஸ்பிஐ ஏடிஎம்களிலும் ஓடிபி மூலம் பணத்தை எடுக்கும் முறை அமலுக்கு வந்துள்ளது.

புத்தாண்டிலிருந்து இரவு 8 மணிக்குப் பிறகு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியின் ஏடிஎம்மில் இருந்து அதிக பணம் எடுக்க விரும்பினால், உங்கள் தொலைபேசியை கையில் வைத்துக்கொள்ள வேண்டும் என எஸ்பிஐ வாங்கி தெரிவித்துள்ளது. எஸ்பிஐ ஏடிஎம்மில் (ATM) இருந்து பணம் எடுக்க ஒரு கடவுச்சொல் (ஓடிபி-OTP) தேவைப்படும். இந்த நிபந்தனை 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நீங்கள் எடுக்க விருப்பப்பட்டால் ஓடிபி அவசியமாகும். இதனால் அவசரமாக பணம் எடுக்க விரும்பினால் உங்கள் மொபைலை உங்களிடம் வைத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் டெபிட் கார்டை பணம் எடுக்க ஏடிஎம் (ATM) இயந்திரத்தில் கார்டை உள்ளே நுழைத்து விவரங்களை தந்த பிறகு OTP கோரப்படும். OTP எண்ணை செலுத்திய பின்னரே பணத்தை வெளியே வரும். எஸ்பிஐயின் இந்த ஏற்பாடு கணக்கு வைத்திருப்பவர்களின் ஏடிஎம் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கும் நலன்களைப் பாதுகாப்பதற்கும் ஆகும். இருப்பினும், எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் வேறு ஒரு வங்கியின் ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுத்தால், அப்பொழுது ஓடிபி அவசியல் இருக்காது. 

எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.....
- ஜனவரி 1 முதல் ஏடிஎம் சென்றால், தொலைபேசியை எடுத்துக் கொள்ளுங்கள்.
- ரூ .10,000 க்கு மேல் பணம் எடுக்க விரும்பினால் OTP கட்டாயம்.
- இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை ஓடிபி இல்லாமல் பணம் இல்லை.
- ஏடிஎம்மில் அனைத்து விவரங்களை செலுத்திய பிறகு OTP தேவைப்படும்.
- இதன் மூலம் மோசடியைக் குறைக்க முடியும்.
- மற்றொரு வங்கியின் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பதற்கு OTP தேவை இல்லை.

ஏடிஎம்மில் நடைபெற்று வரும் மோசடியைத் தடுக்க, நாட்டில் செயல்படும் வங்கிகள் பல முயற்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன. முதலில் அனைத்து வங்கிகளும் சிப் உள்ள ஏ.டி.எம். கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வினியோகித்தன. தற்போது ஏடிஎம் பரிவர்த்தனையின் போது 10000 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட பணத்தை எடுப்பதற்கு புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தான் ஏடிஎம் மூலம் 10 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுக்க ஓடிபி கட்டடாயம்  என SBI வங்கி அறிவித்துள்ளது.

மேலும் உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News