குழந்தைகளுக்கு பாதுகாப்பான தளமாக மாற்ற Netflix அறிமுகப்படுத்தும் புதிய அம்சம்

குடும்பங்கள், குழந்தைகளுக்கு OTT தளத்தை பாதுகாப்பானதாக மாற்ற புதிய அம்சங்களை நெட்பிளிக்ஸ் அறிமுகப்படுத்த உள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 17, 2021, 11:03 PM IST
  • நெட்ஃபிக்ஸ் நிறுவனத்திலிருந்து பெற்றோர்களுக்கு இரு விதமான தகவல்கள் கொடுக்கப்படும்.
  • குழந்தைகள் ஆர்வம் காட்டிய விஷயங்கள் குறித்த தகவல்கள் அனுப்பப்படும்.
  • இரண்டாவது புதுப்பிப்பு 'கிட்ஸ் டாப் 10 வரிசைகள்' அறிமுகம்.
குழந்தைகளுக்கு பாதுகாப்பான தளமாக மாற்ற Netflix அறிமுகப்படுத்தும் புதிய அம்சம் title=

புதுடில்லி: ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் இரண்டு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்த உள்ளது, இதன் மூலம் குடும்பங்கள் தங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகள் மற்றும் படங்கள் தொடர்பான தகவல்களை பெற முடியும்

Mashable India  வெளியிட்டுள்ள தகவல்களின் படி, நெட்ஃபிக்ஸ் நிறுவனத்திலிருந்து பெற்றோர்களுக்கு இரு வார காலங்களில் குழந்தைகள் ஆர்வம் காட்டிய விஷயங்கள்  குறித்த தகவல்கள் அனுப்பப்படும். இதில் அவர்களது குழந்தையின் விருப்பத்தேர்வுகள் மற்றும் ஆர்வம் காட்டியது பற்றிய தகவல்களைக் கொண்டிருக்கும்.

தங்கள் குழந்தைக்கு பிடித்த நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள், அவர்களின் குழந்தையின் விருப்பமான கதாபாத்திரங்கள், சிறந்த கருப்பொருள்கள் அல்லது தலைப்புகள், தங்கள் குழந்தை மிகவும் விரும்பும் நிகழ்ச்சிகளின் வகைகள் ஆகியவை அடங்கிய தகவல்கள், பெற்றோர்களுக்கு வழங்கப்படும் மற்றும் நெட்ஃபிக்ஸ் இல் தங்கள் குழந்தைகள் தொடர்பான பாதுகாப்பு அம்சங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்கான உதவிக்குறிப்புகள்  பற்றிய விப்ரங்களை கொண்டிருக்கும்

ALSO READ: Amazon App quiz: அமேசானில் 10 ஆயிரம் ரூபாய் வெல்ல அரிய வாய்ப்பு

Mashable India அறிவித்த இரண்டாவது புதுப்பிப்பு, 'கிட்ஸ் டாப் 10 வரிசைகள்' குறித்த தகவல்கள். இதில் சந்தாதாரருக்கு நாட்டில் மிகவும் பிரபலமான குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் குறித்த தகவல்கள் இருக்கும்.

இந்தத் தகவல் சந்தாதாரருக்குக் கிடைத்தால், மேடையில் பல்வேறு குழந்தைகளை கவரும் உள்ளடக்கங்களைக் கண்டுபிடித்து ஆராய்வது அவர்களுக்கு மிகவும் எளிதாக இருக்கும்.

"காட்சிகள் மற்றும் திரைப்படங்கள் குழந்தைகள் உலகத்துடன் இணைவதற்கு ஒரு முக்கியமான வழியாகும் - புதிய இடங்களைப் பற்றி அவர்களுக்குக் கற்பிக்கவும், குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடனான உறவை வலுப்படுத்தவும், அவற்றை புரிந்துகொள்ளவும் ​​உதவுகின்றன" என்று நெட்ஃபிக்ஸ் தயாரிப்பு கண்டுபிடிப்பு இயக்குனர் ஜெனிபர் நீவா கூறியுள்ளார்.

Mashable India வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இரண்டு வகை புதுப்பிப்புகளும் இப்போதே தொடங்கி உலகளவில் நெட்பிளிக்ஸ் சந்தாதாரர்களுக்கு வெளிவரும். 

ALSO READ: Amazon Offer: iPhone 12-ல் அட்டகாச தள்ளுபடி, தவற விட்டுடாதீங்க!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News