தேசிய தொழில்நுட்ப தினம் 2022: அறிவியல் சாதனைகளைக் கொண்டாடுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே 11 அன்று தேசிய தொழில்நுட்ப தினம் கொண்டாடப்படுகிறது. கடினமாக உழைக்கும் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஈடுபட்டுள்ள மற்ற அனைத்து அறிவாளர்களின் அனைத்துப் பணிகளையும் போற்றி பாராட்டும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகின்றது.
தேசிய தொழில்நுட்ப தினம் முதன்முதலில் மே 11, 1999 அன்று கொண்டாடப்பட்டது. இந்த நாள் கொண்டாடப்படுவதன் முக்கிய நோக்கம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனைகளை நினைவுகூருவதாகும். இந்த ஆண்டும் இந்த நாள் இன்று (மே 11) அறிவியல் சமூகத்தால் பரவலாக கொண்டாடப்படும். தேசிய தொழில்நுட்ப தினம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்வோம்.
தேசிய தொழில்நுட்ப தினம் 2022 கருத்தாக்கம்
தேசிய தொழில்நுட்ப தினத்தின் கருத்தாக்கம் ஒவ்வொரு ஆண்டும் மாறுகிறது. இந்த ஆண்டுக்கான கருப்பொருள் "நிலையான எதிர்காலத்திற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஒருங்கிணைந்த அணுகுமுறைகள்" என்பதாகும்.
மேலும் படிக்க | சிப்லாவின் புதிய RT-PCR கிட்; வெறும் 45 நிமிடங்களில் ரிசல்ட்
தேசிய தொழில்நுட்ப தினம் 2022 வரலாறு மற்றும் முக்கியத்துவம்
1998 பொக்ரான் அணுகுண்டு சோதனையின் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் மே 11 அன்று இந்தியா தேசிய தொழில்நுட்ப தினமாக கொண்டாடுகிறது. பொக்ரான் அணுகுண்டு சோதனைகள் என்பது இந்திய இராணுவத்தின் பொக்ரான் சோதனைத் தளத்தில் மேற்கொள்ளப்பட்ட ஐந்து வெடிப்புகளின் தொடர் ஆகும்.
அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், மே 11 ஆம் தேதியை நாட்டின் குறிப்பிடத்தக்க சாதனை நாளாக அறிவித்தார். தேசிய தொழில்நுட்ப தினம் 1999 இல் முதல் முறையாக கொண்டாடப்பட்டது. அன்று முதல் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் விஞ்ஞானிகளை இந்த நாளில் கவுரவித்து வருகிறது.
ராஜஸ்தானில் அணுகுண்டு சோதனைகள் நடத்தப்பட்டபோது பெங்களூரில் பறந்த இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானமான ஹன்சா -3 இன் இயக்கத்தையும் இந்த நாள் குறிக்கிறது.
மேலும் படிக்க | மே 18 இந்தியாவில் அறிமுகமாகிறது விவோவின் 2 பிரீமியம் போன்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR