மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Samsung Galaxy M34 5G: விரைவில் அறிமுகம், விவரங்கள் இதோ

Samsung Galaxy M34 5G:  நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன் சம்பந்தமான டீசர்களை வெளியிட தொடங்கியுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 23, 2023, 09:15 AM IST
  • பிரபல மினன்ணு சாதன பிராண்டான சாம்சங், இந்தியாவில் அதன் மிட் - ரேஞ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.
  • இதற்கு சாம்சங் கேலக்சி எம்34 5கி என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • இதனை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Samsung Galaxy M34 5G: விரைவில் அறிமுகம், விவரங்கள் இதோ title=

பிரபல மினன்ணு சாதன பிராண்டான சாம்சங், இந்தியாவில் அதன் மிட் - ரேஞ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இதற்கு சாம்சங் கேலக்சி எம்34 5கி (Samsung Galaxy M34 5G) என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. நிறுவனம் இது சம்பந்தமான டீசர்களை வெளியிட தொடங்கியுள்ளது. 

சாம்சங்கின் இந்த புதிய ஸ்மார்ட்போன் அமேசானில் வாங்குவதற்கு கிடைக்கும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. போனின் பின் பக்க வடிவமைப்பும் டீசரில் காட்டப்பட்டுள்ளது. மற்ற எம் சீரிஸ் போன்களைப் போலவே இந்த ஃபோனும் தட்டையான வடிவமைப்பைக் கொண்டிருக்கும். போனின் பின்புறம் மூன்று கேமராக்கள் இருக்கும். இதைத் தவிர டீசர் குறித்து எந்த தகவலும் இல்லை. டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் போனின் ஸ்பெக்ஸ் ஷீட்டைக் காட்டியுள்ளார்.

Samsung Galaxy M34 5G: (எதிர்பார்க்கப்படும்) விவரக்குறிப்புகள் 

அபிஷேக்கின் கூற்றுப்படி, தொலைபேசி 6.6 இன்ச் sAMOLED டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என டிப்ஸ்டர் அபிஷேக் தெரிவித்துள்ளார். இந்த டிஸ்ப்ளே முழு HD+ தெளிவுத்திறனையும் மற்றும் மென்மையான 120Hz புதுப்பிப்பு வீதத்தையும் ஆதரிக்கும். இதன் காரணமாக பயனர்கள் உயர் தரத்தை அனுபவிக்க முடியும். முன்பக்கக் கேமரா திரையின் மேற்புறத்தில் உள்ள நாட்ச் உள்ளே இருக்கும், இது மெலிதான மற்றும் நேர்த்தியான கேமரா அமைப்பாக இருக்கும்.

மேலும் படிக்க | Ceiling Fan ஆன் செய்யும் போது இந்த தவறை மட்டும் பண்ணாதீங்க!

Samsung Galaxy M34 5G: கேமரா

Samsung Galaxy M34 5G ஸ்மார்ட்போனில் 48MP முதன்மை கேமரா சென்சார் பொருத்தப்பட்டிருக்கும். இது உயர் தெளிவுத்திறன் கொண்ட புகைப்படங்களை (ஹை ரெசல்யூஷன் ஃபோட்டோகிராபி) வழங்கும். மேலும், இது 8MP அல்ட்ரா-வைட் கேமரா சென்சார் மற்றும் 5MP மேக்ரோ சென்சாரையும் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செல்ஃபி எடுக்க, இந்த போனில் பயனர்களுக்கு 13MP முன் பக்க கேமரா கிடைக்கும். 

Galaxy M34 5G ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 1080 SoC மூலம் இயக்கப்படும். இது Wi-Fi 5, Bluetooth 5.3 ஐ ஆதரிக்கும் மற்றும் USB 2.0 Type-C போர்ட்டைக் கொண்டிருக்கும். போனின் எடை சுமார் 199 கிராம் ஆக இருக்கும்.

கூடுதல் தகவல்: Samsung Galaxy F54 5G

சாம்சங், சாம்சங் கேலக்சி எஃப்54 (Samsung Galaxy F54) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 30 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு ஆல்-ரவுண்டர் ஃபோன் ஆகும். இதில் வாடிக்கையாளர்கள் சிறந்த கேமரா, வலுவான பேட்டரி மற்றும் சிறந்த செயல்திறன் ஆகியவற்றைப் பெறுவார்கள். இது தவிர, தொலைபேசியில் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, மிட்-ரேஞ்ச் எக்ஸினோஸ் சிப், வேகமாக சார்ஜ் செய்வதற்கான ஆதரவு ஆகியவையும் கிடைக்கும்.  

Samsung Galaxy F54 5G: இந்தியாவில் இதன் விலை என்ன?

இந்தியாவில் Samsung Galaxy F54 5G இன் விலை ரூ.27,999 ஆகும். இது ஆரம்ப வெளியீட்டு விலை. இதன் சில்லறை விலை வியாபார விரைவில் தெரியவரும். இன்று முதல் இந்த போன் முன்பதிவுக்கு கிடைக்கும். இந்த போனின் விற்பனை விரைவில் ஆன்லைன் விற்பனைத் தளமான பிளிப்கார்ட்டில் தொடங்கும். இது தவிர, சில்லறை விற்பனைக் கடைகளிலும் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

Samsung Galaxy F54: விவரக்குறிப்புகள்

Samsung Galaxy F54 ஸ்மார்ட்போன் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.7-இன்ச் டிஸ்ப்ளேவைப் பெறுகிறது. ஃபோனில் அமோல்ட் பேனல் உள்ளது. இது HD+ தெளிவுத்திறனில் இயங்குகிறது. திரைப் பாதுகாப்பிற்காக கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பூச்சு இதில் உள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் பின் பக்க வடிவமைப்பு கேலக்சி எஸ் 23 போலவே தெரிகிறது. இதனால் இந்த போனுக்கு ஃப்ளாக்ஷிப் உணர்வு கிடைக்கின்றது. 

மேலும் படிக்க | உங்கள் கூகுள் கணக்கை வேறு யாரும் பயன்படுத்துகிறீரார்களா என்பது எப்படி சரி பார்ப்பது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News